26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
teeth
ஆரோக்கியம்அழகு குறிப்புகள்

பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், நம் உடல் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம்….

பற்களின் ஆரோக்கியத்தைக் காத்தால், நம் உடல் ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம். பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும்.

புகைபிடிப்பது, வெற்றிலை பாக்குப் போடுவது போன்றவற்றால் பற்களில் காரை படியும். இதில் பாக்டீரியாக்கள் குஷியாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழும்.

சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப்புள்ளி தெரியும். அங்கு குழி விழும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களும் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.

teeth

பல் சொத்தைபல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவது. குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவு, பிஸ்கெட், மிட்டாய், சாக்லெட், ஐஸ்கிரீம், கேக், பேக்கரி பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம் பல்லின் வெளிப்பூச்சான எனாமலை அரித்துச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

பற்களை சரியாக சுத்தப்படுத்தத் தவறினால், பற்களில் ‘டார்டார்’ எனும் காரை படிந்துவிடும். இது வாய்க்குள் பெருகும் பாக்டீரியாவின் பெருக்கத்தால் ஏற்படுகிறது. இந்தக் காரை பல்லின் வெளிப் பூச்சான எனாமலை சிதைப்பதால், பல்லின் நிறம் மாறுகிறது.

அதிக அளவில் சில ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்வதாலும் பல்லின் நிறம் மாறலாம். புகைபிடிப்பது, புகையிலை போடுவது, காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துவது போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்சனை தோன்றலாம்.

பல் மருத்துவரைச் சந்தித்து `ஸ்கேலிங்’ முறையில் பற்காரையை அகற்றிவிடலாம். அதன் பின்பு ‘பிளீச்சிங்’ முறையில் பற்களைச் சுத்தம் செய்து இதைச் சரிப்படுத்தி விடலாம்.

பற்பசையைப் பொறுத்த அளவில் எவ்வளவு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் என்பதைவிட எப்படிப் பல் துலக்குகிறோம் என்பதுதான் முக்கியம்.

காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒருமுறை என இருமுறை பல் துலக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குப் பல் துலக்குவது நல்லது. பற்களை வேகவேகமாகவும், முன்னும் பின்னுமாகவும் அழுத்தமாகத் தேய்த்தால், பற்கள் விரைவில் தேய்ந்துவிடும்.

Related posts

பட்டுபோல சருமம் மின்ன இயற்கை ஃபேஷியல்…

nathan

பூக்கள் தரும் புது அழகு!

nathan

என்ன ​கொடுமை இது? “என்ஜாய் எஞ்சாமி” பாடலுக்கு ஆட்டம் போட்ட டிக் டாக் இலக்கியா.!

nathan

Animal workout பலராலும் விரும்பப்படுவதற்கான காரணம் இதுதானாம்!…

sangika

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

nathan

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…

sangika

உங்க பொன்னான கைகள்…!

nathan

பொடுகை முழுமையாக போக்க! இத படிங்க…

sangika

நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !2023ல் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !!

nathan