முந்தைய காலங்களில் பணக்காரர்களின் வியாதி என்று சொல்லப்பட்ட சர்க்கரை நோய் இன்று வீட்டுக்கு, வீடு இருக்கிறது. ஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் உள்ளது.
முன்பெல்லாம் நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட்டனர். ஆனால் இன்று துரித உணவு என்னும் பெயரில் கண்டதையும் சாப்பிடுகிறோம். அதனால் நம் உடலும் நோய்களின் கூடாரமாகி விட்டது. 1980ம் ஆண்டு உலக அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 108 மில்லியன். 2014 கணக்கெடுப்பில் இது 422 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்த சர்க்கரை நோய் நம் உடலுக்குள் புகுந்து விட்டால் ஸ்லோ பாய்சனாக நம்மை மெல்ல கொன்று விடும். அதனால் ஆரம்பத்திலேயே அதை இனம் கண்டு தகுந்த சிகிட்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் சோர்வாக இருப்பது, அதீத தண்ணீர் தாகம், காயங்கள் குணமடைவதற்கு அதிக நாள்கள் எடுத்துக் கொள்வது ஆகியவை இதன் ஆரம்ப அறிகுறிகள்.
இந்த நீரிழிவை இரண்டே வாரத்தில் கட்டுக்குள் கொண்டுவர ஒருமுறை இருக்கிறது. கோதுமை 100 கிராம், பார்லி 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீரை எடுத்து இவை அனைத்தையும் போட்டு, 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும். அது தானாகவே குளிர்ந்ததும், வடிகட்டி அந்த நீரை தனியாக ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக 7 நாள்கள் இந்த தண்ணீரை அதிகாலையில், காலி வயிற்றில் சின்ன கின்னத்தில் விட்டு குடிக்கவும். மறுவாரத்தில் அதாவது 7 நாள்கள் முடிந்த பின்னர் அதே போன்று ஒருநாள் விட்டு ஒருநாள் குடிக்கவும். இதை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிப் போயிருக்கும்.
இரண்டு வாரம் குடிப்பதற்கு முன்னரும், குடித்த பின்னரும் உங்க சர்க்கரை அளவை சோதிச்சு பாருங்க…அப்புறம்.. நீங்களும் அப்புறம் ஸ்வீட் எடுங்க…கொண்டாடுங்க…