25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
5 1552885997
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா காதுக்குள் இருக்கும் அழுக்கை பட்ஸ் இல்லாமலே எப்படி வெளியே எடுக்கலாம்?

காட்டன் பட்ஸ் பயன்படுத்தி காதுகளில் உள்ள அழுக்கை எடுப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவ்வாறு பட்ஸ் பயன்படுத்தி அழுக்கை எடுப்பது காதுகளுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காதில் ஏதாவது ஒன்றை நுழைத்து அழுக்கை வெளியேற்ற நீங்கள் செய்யும் முயற்சியால், அந்த அழுக்கை மேலும் உள்ளுக்குள் தள்ளும் அபாயம் உள்ளது.

இதனால் அவை காதுக்குள் அடைத்துக் கொள்கிறது. காது கேளாமைக்கு இது ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த தர்மசங்கடமான சூழ்நிலையைத் தவிர்க்கவும், எளிய முறையில் காதுகளில் உள்ள அழுக்கை வெளியேற்றவும் என்ன செய்யலாம்? வாருங்கள் அதற்கான பதில் இதோ உங்களுக்காக ..

காது அழுக்கு என்றால் என்ன? காது கால்வாய் பகுதியில் உள்ள சுரப்பிகளால் வெளியிடப்படும் பழுப்பு அல்லது மஞ்சள் நிற பொருள் தான் இந்த அழுக்கு. இந்த அழுக்கு தூசு மற்றும் இதர வெளி பொருட்கள் செவிப்பறையை பாதிக்காமல் இருக்கும்படி பாதுகாப்பாய் இருக்க உதவுகிறது. காது அழுக்கு அதிகமாக உற்பத்தியாகும்போது அல்லது அழுக்குகளின் வெளிப்பாட்டால் செவிகளில் அடைப்பு ஏற்படும்போது மட்டுமே இந்த காது அழுக்கு தீங்கு ஏற்படுத்தும்.

காரணங்கள் காது அழுக்கு அதிகமாகும்போது தானாக அடைப்பு ஏற்படுவதில்லை. பொதுவாக, செவிகளில் உள்ள ஓட்டை வழியாக இந்த அழுக்குகள் இயற்கையாக வெளியேறி விடுகின்றன. ஒருவேளை இந்த அழுக்குகள் வெளியேறாமல் உள்ளே சேமிக்கப்படும்போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இந்த நிலை உருவாக சில காரணங்கள் உண்டு. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். Q-டிப், காட்டன் பட்ஸ், பாபி பின், ஹேர் பின், உங்கள் விரல் போன்றவற்றை காதுக்குள் நுழைத்து அழுக்கை எடுக்க முயற்சிப்பதால் செவியின் மேல்புறம் உள்ள அழுக்கு மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மீதம் உள்ள அழுக்கு இன்னும் ஆழத்திற்கு சென்று காது கால்வாய்க்குள் தள்ளப்படுகிறது. இயர் போன், இயர் ப்ளக் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவதும் செவிகளில் அடைப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம். காரணம் செவிக் கால்வாயிலிருந்து அழுக்கு இயற்கையாக வெளியேறும் முறையை இவை தடுக்கக் கூடியதாக இருக்கலாம்.

அறிகுறிகள் செவிகளில் அழுக்கு சேமிக்கப்பட்டு இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் குறிப்பிட்ட காலம் கடந்தும் இருந்தால், மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

காது வலி . கேட்கும் திறன் குறைதல் அல்லது பகுதி நேர காது கேளாமை . காதில் ரீங்காரம் ஒலிப்பது . காது அடைப்பது போல் உணர்வு . காதில் சீழ் வடிதல் . மயக்கம் . காதில் இருந்து துர்நாற்றம் உண்டாவது . காதுகளில் அரிப்பு அல்லது எரிச்சல் . கடுமையான சுழல் உணர்வு . சமநிலை இழப்பு . நடக்க இயலாமை . வாந்தி . அதிக காய்ச்சல் . திடீர் காது கேளாமை

வீட்டுத் தீர்வுகள் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கு தென்படாமல் இருந்தால், உங்கள் காதுகள் ஆரோக்கியமாக இருப்பதாக நீங்கள் நம்பினால், (செவிப்பறையில் ஓட்டை இல்லை என்பது உறுதி என்றால் ), நீங்கள் காதில் உள்ள அழுக்கைப் போக்க வீட்டில் இருந்தபடியே முயற்சிக்கலாம். காதில் உள்ள அழுக்கைப் போக்க பிரபலமான ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.

எண்ணெய் காதில் உள்ள அழுக்கை வெளியேற்ற அதனை முதலில் மென்மையாக்கிக் கொள்ள வேண்டும். முதலில் சில நாட்கள் தொடர்ந்து பேபி எண்ணெய், மினரல் எண்ணெய், கிளிசரின், ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை செவி கால்வாய்க்குள் சில துளிகள் விட வேண்டும். இந்த அழுக்கு மென்மையாக மாறியவுடன் கழுவும் நிலைக்கு தயாராக இருக்கும். உங்கள் காது கால்வாய் பகுதி நேராக இருக்கும்படி தலையை சாய்த்துக் கொள்ளுங்கள். ஒரு ரப்பர் பல்ப் சிரிஞ் (விலை மலிவானது, மருந்து கடை அல்லது ஆன்லைன் கடைகளில் கிடைக்கும்) மூலம் வெதுவெதுப்பான நீரை காதுக்குள் செலுத்தவும். இந்த நீர் உடல் வெப்பநிலையில் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். நீரை காதுக்குள் செலுத்திய சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க வேண்டும். பின்பு எதிர் திசையில் திரும்புவதால் காதில் உள்ள அழுக்கும் நீரும் வெளியேறி விடும். ஒரு டவல் மூலம் அல்லது கூல் செட்டிங்கில் வைத்து ஹேர் ட்ரையர் மூலம் காதுகளை காய விடவும்.

உப்பு நீர் காது அழுக்கை வீட்டிலேயே போக்கும் மற்றொரு சிறந்த முறை உப்பு நீர் வழிமுறை. . அரை கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து உப்பு கரையும் வரை நன்றாகக் கலக்கவும். . இந்த நீரில் காட்டன் பஞ்சை ஊற விடவும். . அழுக்கு உள்ள காது வானைப் பார்க்கும்படி தலையை சாய்த்துக் கொள்ளவும். . பஞ்சைப் பிழிந்து சில துளி நீரை காதுக்குள் விடவும். . அதே நிலையில் 3-5 நிமிடங்கள் அப்படி இருக்கவும். . பிறகு, தலையை எதிர்புறம் சாய்த்து, காதில் செலுத்திய நீர் வழியும்படி பார்த்துக் கொள்ளவும். . காதுகளின் வெளிப்புறத்தை சுத்தமான டவல் அலல்து ஒரு துணி மூலம் துடைத்து அழுக்கை வெளியேற்றவும்.

ரப்பிங் அல்கஹால் வினிகர் மற்றும் ரப்பிங் அல்கஹால் பயன்படுத்தி காது அழுக்கைப் போக்கும் மற்றொரு முறை பற்றி இங்கு நாம் காணலாம். . வெள்ளை வினிகர் மற்றும் ரப்பிங் அல்கஹால் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். . இந்த கலவையில் கட்டன் பஞ்சை ஊற விடவும். . பாதிக்கப்பட்ட காதை வானைப் பார்த்தபடி வைத்துக் கொள்ளவும். . பஞ்சைப் பிழிந்து சில துளி வினிகர் அல்கஹால் கலவையை காதுக்குள் விடவும். . அடுத்த 5 நிமிடம் அதே நிலையில் அமர்ந்து கொள்ளவும். . பிறகு, எதிர் திசையில் திரும்பி காதில் இருந்து அழுக்கை வெளியேற்றவும். . காதின் வெளிப்புறப் பகுதியை டவல் அல்லது வெள்ளைத் துணியால் துடைத்துக் கொள்ளவும்

பூண்டு எண்ணெய் கடைசி தீர்வாக சொல்லப்படும் இந்த முறை, ஒரே நேரத்தில் இரண்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. பூண்டு பயன்படுத்தி செய்யும் ஒரு சிகிச்சை இதுவாகும். காது அழுக்கைப் போக்குவதோடு மட்டுமில்லாமல், தொற்று பாதிப்பால் உண்டான வலியைக் குறைக்கவும் இந்த முறை நன்கு பயன்படுகிறது. . ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வெதுவெதுப்பான (உடல் வெப்ப நிலைக்கு சற்று அதிகமான வெப்பத்தில்) ஆலிவ் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும். . ஒவ்வொரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அளவுக்கு ஒரு பல் பூண்டு என்ற விகிதத்தில் எடுத்துக் நசுக்கிக் கொள்ளவும். . பூண்டை எண்ணெய்யில் கலந்து ஒரு அரை மணி நேரம் ஊற விடவும். . பிறகு பூண்டை எண்ணெய்யில் இருந்து வடிகட்டி எண்ணெய்யை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

இயர் கன்ட்லிங் (Ear Candling) இயர் கன்ட்லிங் (Ear Candling) முறை இங்கு பரிந்துரைக்கப்படவில்லை. நிறைய மக்கள் இயர் கன்ட்லிங் முறையால் காதில் உள்ள அழுக்கை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இதன் நன்மைகள் நிரூபிக்கப்படவில்லை, மேலும் இதனால் காதில் புண்கள் ஏற்படுவது, காது கால்வாயில் மெழுகு படிவது, அழுக்கு அடைப்பு, செவிப்பறை சேதம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த இயர் கன்ட்லிங் முறை செவிகளுக்கு தீவிர காயத்தை உண்டாக்குவதாக அறியப்படுகிறது.

காது அழுக்கைத் தடுப்பது எப்படி? காதுகளில் அடைப்பு ஏற்படும்படி உண்டாகும் காது அழுக்கைத் தடுப்பது அவசியம் என்றாலும் இந்த நிலை பற்றி நீங்கள் முற்றிலும் அறிந்து கொள்வது நல்லது. காட்டன் பட்ஸ், மற்றும் மேலே கூறிய இதர பொருட்களை காதுக்குள் நுழைத்து அழுக்கை வெளியேற்ற முயற்சிப்பதால் அழுக்கு மீண்டும் காதின் உட்பகுதிக்குள் ஆழமாக செலுத்தப் படுகிறது. உங்கள் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போதிய அளவு கிடைக்காதபோது, சுரப்பிகள் அதிக அளவு அழுக்கை உற்பத்தி செய்வதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒமேகா 3 குறைபாடு காரணமாகவும் அதிகரித்த காது அழுக்கு உண்டாகலாம். இதற்கான சில தீர்வுகள் இதோ உங்களுக்காக.. ஒவ்வொரு வாரமும் ஒமேகா 3 சத்து உள்ள மீன்களை சாப்பிடுங்கள். கானாங்கெளுத்தி , சாலமன், ஹெர்ரிங், சார்டின், நெத்திலி ஆகிய மீன்களில் இந்த சத்து அதிகமாக உள்ளது. தாவர உணவுகள் எடுத்துக் கொள்பவர்கள், ஆளி விதை எண்ணெய், சியா விதைகள், வால்நட், சோயாபீன்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.5 1552885997

Source :Boldsky

 

Related posts

தெரிஞ்சிக்கங்க…ச ர்க்கரை நோ ய் முதல் பு ற்றுநோ ய் வரை.. தெ றித்து ஓ ட வி டும் கருஞ்சீரகம்…!

nathan

மார்பில் பால் கட்டிக்கொள்ளாமல் இருக்கணும்னா என்ன செய்யணும்?

nathan

பெண்கள் தவறாமல் எடுக்க வேண்டிய பரிசோதனைகள்

nathan

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க!சூப்பர் டிப்ஸ்..

nathan

பொடுகுத் தொல்லையில் இருந்து முழுமையாக விடுதலைத் தரும் சில ஆயுர்வேத வழிகள்!

nathan

உங்க மார்பகங்களை பெரிதாக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…இரட்டை மாஸ்க் போடுறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க

nathan

உங்க குடல்ல ஓட்டை விழுந்திருக்கா ?அப்ப இத படிங்க!

nathan