29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
3 1537261414
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஒரு பைசா செலவில்லாம நான்கு நாளில் சிறுநீரக்கல் கரைக்க சித்தர்கள் கூறும் அற்புத மூலிகை

பைசா செலவில்லாம நான்கே நாட்களில் சிறுநீரகக்கல்லை வெளியேற்ற சித்தர்கள் கூறும் மருத்துவம் இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.கட்டாயம் இருக்கிறது. அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

கல்தோன்றி, மண்தோன்றி மனிதன் தோன்றிய சமயத்தில் கடவுளும் சித்தர்களும் ஞானிகளும் மனிதர்களுக்கு உண்டாகக் கூடிய மருத்துவ முறைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்றைய நாட்களில் சிறுநீரகக் கல் பிரச்னை பொதுவாக நிறைய பேருக்கு வருகிறது. இது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே இருந்த பிரச்சினை போய் இப்போது பெண்களுக்குமே வருகிறது.

சிறுநீரகக் கல் மனிதர்களுடைய வியர்வை, சாப்பிடும் உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு ஆகியவை மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் சென்று படிந்து விட்டால் தான் அதை நாம் சிறுநீரகக் கல் என்று குறிப்பிடுகிறோம். அந்த கல்லை கண்ட மருந்துகளையெல்லாம் சாப்பிடக் கூடாது. சித்தர்கள் சொல்லும் அற்புத இயற்கை மூலிகைகள் மூலம் கரைக்க முயற்சி செய்ய வேண்டும. அதுதான் நமக்கு நிரந்தரப் பயன் கிடைக்கும்.

மூலிகை மருந்து பொதுவாக சிறுநீரகக் கல்லை கரைப்பதற்கு நமக்குத் தெரிந்த பிரபலமான மருந்து வாழைத்தண்டு சாறு. ஆனால் வாழைச்சாறு அதிகமாகக் குடித்தால், உடலில் உள்ள நீரை முழுக்க முழுக்க உறிஞ்சி எடுத்துவிடும். அதைவிட எளிமையான மருத்துவ மூலிகை ஒன்று உண்டு. இந்த மூலிகை மூலமாக ஒரு பைசா செலவு இல்லாமல் சிறுநீரகக் கல்லை அடியோடு கரைத்துவிட முடியும்.

யானை நெருஞ்சி எத்தகைய கல்லையும் கரைத்துவிடும் அற்புத மூலிகையான சித்தர்கள் சொல்வது இந்த யானை நெருஞ்சி செடி தான். இது எப்பேர்ப்பட்ட கல்லடைப்பையும் கரைக்கும். இந்த செடிக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று தெரியுமா? யானையின் கால் மிகவும் தடிமனனானது. முள்ளெல்லாம் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இந்த முள்ளானது யானையின் காலில் பட்டுவிட்டால், யானையால் எழுந்திருக்க முடியாமல் படுத்துக் கொள்ளும். மற்றொரு விளக்கமும் உண்டு. அதேபோல ஆனானப்பட்ட நோய்களையும் தீர்க்கும் மூலிகை என்றும் பெயர்.

எப்படி சாப்பிட வேண்டும்? முதல் நாள் சமைத்த அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து நீராகாரம் சாப்பிடுவது நம் முன்னோர்களின் காலை உணவு. ஆனால் இன்றோ நமக்கு அது கீழ்தரமான உணவாக கருதி விட்டுவிட்டோம். இதில் உள்ள அற்புதமே வேறு. இனியாவது அதை உணருங்கள்.

தேவையான பொருள்கள் ஆனை நெருஞ்சி செடி – 1 பழைய சாத நீராகாரம் – 1 கப் செய்முறை ஒரு கப் பழைய சாதத்துக்கு நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஆனை நெருஞ்சி செடியை வேரை வெட்டி விட்டு, தண்டோடு வெட்டி வைத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து, அந்த நீராகாரத்தில் விட்டு நன்கு அலசி விட வேண்டும். நன்கு இந்த செடியை அலச அலச நீராகாரம் கொஞ்சம் திக்காகிக் கொண்டே வரும். ஓரளவுக்கு திக்கானதும் அப்படியே 20 நிமிடங்கள் வரையிலும் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்து பின் குடிக்க குடிக்க வேண்டும். இரவிலேயும் இந்த இலையை நீராகாரத்தில் போட்டு வைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும் செய்யலாம்.

அறிகுறி நான்கு நாட்கள் குடித்து வந்தால் போதும். சிறுநீரகக் கல் வெளியேறிவிடும். இதை எப்படி நாம் தெரிந்து கொள்வது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் கடுப்பு உண்டாகும். அப்போது கல் கெரைந்து வெளியேறுகிறது என்று அர்த்தம். நான்கு நாட்களில் கிட்டதட்ட 18 mm அளவுள்ள கல் வரையிலும் கரைந்து விடுமாம்.3 1537261414

Source : boldsky

Related posts

கணவன் – மனைவியின் குணங்களே உறவை வலுவாக்கும்

nathan

குடைமிளகாய் மருத்துவ பலன்கள்

nathan

உங்களுக்கேற்ற மகப்பேறு மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

உங்க வாய் பயங்கரமா நாறுதா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்

nathan

மதுவை ஒழிப்போம் வீட்டை காப்போம்

nathan

தடுப்பூசிகள் டாக்டர் என்.கங்கா

nathan

இந்த ஒரு பொருள் ஆஸ்துமா பிரச்சனைக்கு குட்-பை சொல்ல வைக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

தூங்குவதற்கு சிரமப்படுகிறீர்களா?தூக்கம் வரலையா..??

nathan