29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
20 9
சரும பராமரிப்பு

நெய்யை முகத்துல தேய்த்தால் என்ன நடக்கும்? முயன்று பாருங்கள்

மணக்க மணக்க நெய் சேர்த்து சாப்பிடுவதும் தனி ருசி தாங்க. இநத நெய் சிறந்த ருசியை தருவதோடு நிறைய நன்மைகளையும் நமக்கு அள்ளித் தருகிறது. நமது சருமத்திற்கும் அழகுக்கும் இதன் பயன் சாலச் சிறந்தது எனலாம்.

20 9
அதிலும குழந்தைகளுக்கு நெய் என்றால் மிகவும் விருப்பம். வயதாக வயதாக நெய்யில் கொழுப்பு அதிகம் என்று சொல்லி அறவே அதை ஒதுக்கி வைத்துவிடுகிறோம். ஆனால் உண்மை அது அல்ல. நெய்யில் இருப்பது நல்ல கொழுப்பு தான்.

வறண்ட சருமம் உங்கள் சருமம் நாள் முழுவதும் வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு நெய் ஒரு சிறந்த தீர்வளிக்கிறது. எனவே இதற்கு சில சொட்டுகள் நெய்யை எடுத்து உங்கள் சருமத்தில் தடவிக் கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் அதைக் கொண்டு மசாஜ் செய்யவும். இது உங்கள் சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு லேயர் மாதிரி செயல்பட்டு சருமம் வறண்டு போகாமல் தடுக்கிறது.

கருவளையத்தை தடுத்தல் உங்கள் உணவில் நீங்கள் நெய்யை சேர்த்துக் கொண்டு வந்தால் இளமையாக இருக்கலாம். காரணம் நெய்யில் உள்ள விட்டமின் ஈ உங்கள் சரும சுருக்கங்கள், வயதாகுவதை தடுத்து இளமையை நீடிக்கிறது. தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் சில துளி நெய்யை கண்ணின் கருவளையம் உள்ள பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பின் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவுங்கள்.

குளியல் எண்ணெய் பெரும்பாலும் உடம்புக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதென்றாலே நாம் எள் எண்ணெயான நல்லெண்ணெயைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அதைவிடவும் உங்கள் குளியலுக்கு நெய் ஒரு சிறந்த குளியல் எண்ணெய் ஆகும். 5 டேபிள் ஸ்பூன் நெய்யை 10 சொட்டுகள் எஸன்ஷியல் ஆயிலுடன் சேர்த்து உடம்பில் தடவிக் கொண்டு குளியுங்கள். உங்கள் சருமம் மிருதுவாகவும் ஜொலிப்பாகவும் இருக்கும்.

களைப்படைந்த கண்கள் உங்கள் கண்கள் களைப்படைந்து போய் காணப்பட்டால் சில துளி நெய்யை கண்களை சுற்றி அப்ளே செய்து கொள்ளுங்கள். கண்களுக்கு நெய் சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து விட்டு பின்னர் கண்களை கழுவி விடுங்கள். கண்கள் ரெம்ப பிரகாசமாக காட்சியளிக்கும்.

பளபளப்பான உதடுகள் நெய் ஒரு இயற்கையான எண்ணெய் பொருளாகும். இது உங்கள் உதடுகளை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும். அதிலும் குறிப்பாக இந்த பனிக்காலத்தில் ஏற்படுகின்ற உதடு வறட்சி, வெடிப்பு ஆகியவற்றை சரிசெய்வதில் மிகச் சிறந்த பலனைத் தருவது நெய் தான். சிலர் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். அது உதட்டைக் கருப்பாக்கிவிடும்.

Related posts

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?

nathan

தீக்காயத்தினால் உண்டாகும் தழும்பை மறையச் செய்யும் சுலபமான வழிகள்!!

nathan

கழுத்தில் வரும் சுருக்கத்தை போக்க வழிகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள் சில…அழகு குறிப்புகள்!

nathan

ஆயுள் முழுக்க இளமையோடு ஜொலிக்க உதவும் அமிர்தப்பொடி… வீட்டில் எப்படி தயாரிப்பது..?இத படிங்க!

nathan

இருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்!

nathan

உங்களுக்கு தெரியுமா கழுத்துப் பகுதியில் உள்ள அசிங்கமான சுருக்கங்களைப் போக்கும் எளிய வழிகள்!

nathan

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் சத்தான உணவுகள்

nathan