28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 1551855805
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா மூக்குல இந்த மூலிகை சாறை விட்டா கோமாவுல இருக்கறவங்கள கூட பிழைக்க வெக்க முடியுமாம்

ஆயுர்வேதத்தில் நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு உண்டா என்பது பலருக்கும் அறியாத தகவலாகவே உள்ளது. இப்படி நிரந்தர நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகள் இருக்கத்தான் செய்கின்றனர். படுத்த படுக்கையில் கிடப்பவர்கள் கூட எழுந்திருக்கும் அளவிற்கு ஆயுர்வேத மருத்துவமும் கண்டுபிடிப்புகளும் வளர்ந்துள்ளன. ஆனால் மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு தான் இருப்பதில்லை.

அந்த வகையில் பார்க்கும் போது 61 வயது பெண், கோமாவில் படுத்த படுக்கையாக இருந்த ஒருவர் ஆயுர்வேத முறைப்படி சிகச்சை பெற்று பலனடைந்துள்ளார். அவருக்கு கொடுக்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சை முறைகளைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பஞ்சகர்மா பஞ்சகர்மா என்ற ஆயுர்வேத சிகிச்சை முறையில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யப்படுகிறது. இதற்காக நிறைய ஆயுர்வேத மூலிகை மருந்துகளை பயன்படுத்துகின்றனர். உடல் சுத்திகரிப்பு – சோதனா சிகச்சை ஊட்டமளிக்கும் சிகிச்சை – ப்ரிமானா குடும்ப உடல் நல பராமரிப்பு – சமனா சிரோதரா-இன்ஸோமினியா(தூக்க பிரச்சினை) நாசியா- மூளைக்கு மருந்து செலுத்துதல்

கோமா நிலை மருத்துவ விளக்கம் படி பார்த்தால் 6 மணி நேரத்துக்கு மேலாக மூளை இறப்பு நிலை என்று கூறப்படுகிறது. இந்த கோமா நிலை நோயாளிகளால் எதையும் பார்க்கவோ, கேட்கவோ, உணரவோ முடியாது. இது ஒரு சாதாரண தூக்க நிலை கிடையாது. வருடம் வருடமாக தூங்கும் நிலை. கோமாவில் இருப்பவர்களால் எந்த செயலும் செய்ய இயலாது. பொதுவாக கோமா நிலை ஏற்பட முக்கிய காரணம் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் இதயம் செயலிழப்பு ஏற்படுவது தான்.

ஆயுர்வேத விளக்கம் இந்த கோமா நிலையை ஆயுர்வேத மருத்துவத்தில் சன்னியாஸா என்கிறார்கள். நமது உடலில் உள்ள மூன்று தோஷங்களில் பாதிப்பு ஏற்பட்டு நம் மனம், உடல் மற்றும் பேச்சு பாதிப்படைகிறது. இந்த தோஷ பாதிப்பு நமது இதயத்தை பாதித்து மூளை செயலிழப்பை ஏற்படுத்தி விடுகிறது. இந்த கோமாவிற்கு சரியான சிகிச்சை மற்றும் மருந்துகள் கொடுத்து வந்தால் இதிலிருந்து மீள முடியும். புகை, பொடிகள், நாசி வழி மருந்து மூலம் ஆயுர்வேத முறையில் இதற்கு சிகச்சைகள் வழங்கப்படுகிறது.

நாசியா ஆயுர்வேத முறை நமது மூக்கு என்பது உணர்வுகளுக்கான கதவு என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இந்த மூக்கின் வழியாக மருந்து செலுத்தும் போது மனம், கபம், பிராணா வாதம், சதக்கா பித்தம் மற்றும் மஜ்ஜா தாது [9] ஆகியவற்றின் பாதிப்பை சரி செய்கிறது. அதன் படி நாசியா என்பது நமது மூக்கு தூவரத்தின் வழியாக மருந்து செலுத்தப்படுகிறது. இதன் படி சுவாசப் பாதை சுத்தமடைகிறது. இது நிணநீர் அமைப்பை நோயெதிர்ப்பு சக்தியுடன் வைத்து குழந்தைகள், பெரியவர்களுக்கு சுவாச தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

விர்ச்சனா நாசியா இந்த வகையில் உலர்ந்த மூலிகை பொடி மூக்கின் துவாரம் வழியாக உறிஞ்சப்படுகிறது. இதற்கு பிரம்மி, வசம்பு, ஜதமண்ஸி போன்ற மூலிகை பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ப்ருஹன நாசியா இந்த முறையில் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உப்பு, சத்வத்ரி நெய், எண்ணெய்கள், மருத்துவ பால் போன்றவற்றை மூக்கின் வழியாக அனுப்பப்படுகிறது.

சாமனா நாசியா இந்த முறையில் மூலிகை சாறு, தேயிலை மற்றும் மருத்துவ எண்ணெய்கள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன. பித்தம் தோஷத்திற்கு பிரம்மி நெய்யும், கபம் மற்றும் வாதத்திற்கு வசம்பு எண்ணெய்யும் பரிந்துரைக்கப்படுகிறது. டிக்கா நெய் வாதம் மற்றும் பித்த தோஷத்திற்கு பயன்படுகிறது.

நவனா நாசியா மூலிகை சாறு, எண்ணெய்கள், ஜூஸ் போன்றவற்றை கலந்து பயன்படுத்துகின்றனர். பித்தம் – வாதம், பித்தம் – கபம் நோய்களுக்கு பயன்படுகிறது. கபம் மற்றும் வாதத்திற்கு வசம்பு சாறும், பித்தத்திற்கு பிரம்மி ஜூஸிம் பயன்படுகிறது.

மார்ஷியா இந்த ஆயுர்வேத முறையில் சுண்டி விரலில் நெய் தடவி முக்கினுள் வைக்கப்படுகிறது.அப்புறம் மெதுவாக மசாஜ் செய்யப்படுகிறது. இது மன அழுத்தம், அடர்ந்த திசுக்களை திறத்தல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

நாசியா செய்யும் வேளை நாசியா செய்வதற்கு சிறந்த வேளை காலைப்பொழுது மட்டுமே. இது கபம் சம்பந்தமான நோய்களை எளிதில் குணப்படுத்துகிறது. அதே மாதிரி பித்த சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மதிய வேளை சிறந்தது. வாத பிரச்சினைகளுக்கு மாலை வேளை சிறந்ததாக அமையும். நெட்டி என்ற சுவாச பாதையை சுத்தம் செய்யும் முறையைக் கொண்டு சுவாச பாதையில் தேங்கியுள்ள தொற்றை நீக்குகிறது.. நாசியா முறையை வெறும் வயிற்றில் குளிப்பதற்கு முன் அல்லது பின், உடற்பயிற்சி செய்வதற்கு முன் அல்லது பின் என்று செய்து வரலாம். தலையை உயர்த்தி கொண்டு ஒவ்வொரு மூக்குத் துவாரத்தின் வழியாக 5 சொட்டுகள் விட வேண்டும். அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அப்போது தான் மருந்து உள்ளே இறங்கும். மூக்கின் வழியாக நுழையும் மருந்து தொண்டைக்கு வர வேண்டும்.

கோமா சிகச்சை இதே சிகச்சையை 28 ஆகஸ்ட் 2010 ல் கோமா நிலைக்கு சென்ற 61 வயது பெண்ணுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகள் கொடுத்து சரி செய்து உள்ளனர். அந்த பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து 28 நாட்களுக்கு இரைப்பை குழாய், ஆக்ஸிஜன் உள்ளிழுத்தல், ரெயிலின் குழாய் மற்றும் சுவாச அமைப்பு எல்லாம் வைத்து பராமரித்து வந்துள்ளனர். பிஸியோதெரபி, சிம்ட்டோமேட்டிக் சிகிச்சை போன்றவற்றையும் செய்துள்ளனர்.

தூப நாசியா கோமா நிலையில் இருந்த அவருக்கு ஆயுர்வேத முறைப்படி தூப நாசியா செய்யப்பட்டுள்ளது. தூப நாசியா என்பது மூலிகை புகையை ஏற்படுத்தி சுவாச பாதையை சுத்தம் செய்வது ஆகும். இதற்கு திரிகடுகு பொடி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை கோமா நிலையில் உள்ள அவரின் உணர்திறன் மற்றும் தசை செயல்பாட்டுக்கு உதவி செய்துள்ளது.

பிரதாமனா நாசியா இந்த நாசியா முறையில் திரிகடுகு சூரணம், இஞ்சி, கருப்பு மிளகு, திப்பிலி பவுடர் களை சேர்த்து சூரணம் தயாரிக்கப்படுகிறது. இந்த சரண பொடியை நோயாளியின் மூக்கில் 15 செமீ தொலைவில் குழாய் வழியாக மூக்குத் துவாரங்களில் செலுத்தப்படும். இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வருகின்றனர்.

தூப நாசியா அடுத்து தூப நாசியா முறை செய்யப்படுகிறது. இதில் நோயாளியை தூப குச்சியின் நறுமணத்தை நுகர வைக்கின்றனர். இதை செய்ய 5 மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. வசம்பு, பெருங்காயம், குக்குலு, ஜட்மண்ஸி, நெல்லிக்காய் போன்ற மருந்துகள் சங்கயஸ்தாப மருந்துகள் என்று அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு உணர்வுகளை கொடுக்கிறது. இதை ஏழு நாட்களுக்கு மூன்று தடவை என காலை வேளையில் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

பரிசோதனை அதே மாதிரி தினமும் கோமா நோயாளியின் இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு, உடல் திரவ நிலை, சுவாச திறன், ஆக்ஸிஜன் அளவு, நோயாளியின் உடல் மெட்டா பாலிசம் மற்றும் திசு ஆக்ஸினேற்றம் போன்றவற்றையும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

நாசியாவிற்கு முன் மற்றும் பின் கண்காணிக்க வேண்டியவை கண்கள் திறப்பு வலியுடன் திறத்தல் பேசுதல் திடீர் அசைவு பேசும் திறன் எதாவது சத்தம் கொடுத்தல் வார்த்தைகள் தடுமாறி பேசுதல் குழப்பம் அசைவுகள் வலியுடன் கைகளை நீட்ட முயற்சித்தல் வலி குறைதல் உடலில் வலி கட்டளைக்கு இணங்குதல்

3 நாட்களில் கண்கள் திறப்பு ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆயுர்வேதப்படி வாதம், பித்தம், கபம் மாற்றம் தான் மூளை செயலிழப்பை ஏற்படுத்தி விடுகிறது

திரிகடுகு இந்த மூலிகை பொடி மூளை செயலிழப்பை சரி செய்ய உதவுகிறது. இது நியூரோ டிரான்ஸ்மிட்டர் மாதிரி செயல்பட்டு மூளையில் உள்ள நரம்புகளை தூண்டி உணர்வு கடத்தலை சரி செய்கிறது. இதனால் மூளை செயல்பட ஆரம்பித்து விடும். அப்புறம் நோயாளியால் அசைவுகளை தர முடிகிறது.

முடிவு இது ஆயுர்வேதத்தில் உள்ள மிகச் சிறந்த முறை. இந்த மூலிகை மூக்கின் வழியாக உட்புகுத்தி மூளைக்கு சென்று உடம்பில் உள்ள பித்தம், கபம், வாத செயல்பாட்டை சரி செய்கிறது. மூளையின் உணர்திறனை மீட்டெடுப்பதில் சிறந்து விளங்குகிறது. இந்த மருந்துகளில் உள்ள உஸ்னா, டிக்ஸ்னா, வைவெய் மற்றும் விக்கிசி போன்ற பொருட்கள் மூளையில் செயல்பாட்டை தூண்டுகிறது. கோமாவில் இருந்த இந்த பெண்ணின் மீட்பு ஆயுர்வேத மருத்துவத்தை உயர்த்தி உள்ளது என்றே கூறலாம். மருந்துகளின் எந்த வித நேரடி தொடர்பும் இல்லாமல் நாசியா வழியாக மட்டுமே கோமா வை குணப்படுத்தி யது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இந்த பஞ்சகர்மா தெரபியின் 14 நாட்களிலேயே நோயாளிக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கோமா நிலையை குணப்படுத்த அலோபதியே தோல்வியுற்ற நிலையில் ஆயுர்வேத மருத்துவ முறை சாதித்து இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. பராம்பரிய முறையான ஆயுர்வேதம் இன்னும் வருங்காலத்திலும் நிறைய வகைகளில் நோயாளிகளுக்கு உதவும் என நம்பலாம்.
cover 1551855805

Related posts

இருமலுக்கு உடனடி தீர்வு தரும் இயற்கை வைத்தியம்

nathan

நாட்டு மருந்துக் கடை – 9 ~ பெட்டகம்

nathan

சூப்பர் டிப்ஸ்! பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!!

nathan

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!

nathan

தெரிந்துகொள்வோமா? நாள் முழுவதும் களைப்புடன் இருப்பது போல் உணர்வதற்கான காரணங்கள்!!!

nathan

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களை அதிகம் தாக்கும் ப்ரோஸ்டேட் புற்று நோயின் அறிகுறிகளும் , வராமல் தடுக்கும் உணவுகளும்!!

nathan

பெண் எந்த வயதில் அழகு

nathan

கம்பங்களி செய்வது எப்படி? சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்!!

nathan