pain1
ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தவிர்க்க இவற்றை செய்யுங்கள்!…

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தவிர்க்கவும் சூடான, சுவையான நெய்யில் உருட்டிய கடலை உருண்டை உண்டுபாருங்கள். அப்போ தெரியும்…

தேவையான பொருட்கள்

பச்சை நிலக்கடலை – 250 கிராம்

வெல்லம் – 250 கிராம்

நெய்-100 கிராம்

pain1

செய்முறை

250 கிராம் பச்சை நிலக்கடலையை வெறும் வாணலியில் நன்கு வறுக்க வேண்டும். பின்பு, அதனை ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கும்போதே, மிதமான சூட்டில் தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து, 250 கிராம் வெல்லத்தை பொடிசெய்து வைத்துக்கொள்ளவும். பின்பு, மிக்சியில் நிலக்கடலையையும் பொடித்த வெல்லத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும். இரண்டையும் சேர்த்து அரைத்தால்தான் உருண்டைப் பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். வழுவழு என்று அரைக்கக் கூடாது.

அரைத்ததை எடுத்துக்கொண்டு, சிறிய, சிறிய உருண்டையாக நன்கு அழுத்திப் பிடித்து உருட்டவும். ஒருவேளை உருண்டை வரவில்லையென்றால், நெய்யை மிதமாக சூடேற்ற வேண்டும். பின்பு அந்த சூடான நெய்யில் மாவை சேர்த்து உருண்டைப் பிடிக்கவும்.

இதனை உண்பதால் ஏற்படும் பயன்கள்:

நிலக்கடலையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். இந்த நிலக்கடலையுடன் வெல்லத்தைச் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

மேலும், நிலக்கடலையை பச்சையாக சாப்பிடாமல், தண்ணீரில் சில மணிநேரம் ஊறவைத்து சாப்பிடும்போதுதான், நமக்கு முழுபலனும் கிடைக்கிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தவிர்க்கவும் இதை சாப்பிடலாம்.

Related posts

ஆயுளை காக்கும் பற்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது?

nathan

சுவையான டயட் மிக்சர் செய்து பாருங்கள்….

sangika

சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

nathan

புத்துணர்ச்சி…உடல் ஆரோக்கியம்… ஒரே கல்லில் இரண்டு மாங்காய்….

sangika

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் வாழைப்பூ

nathan

பெண்களுக்கு எப்போது இறுதி மாதவிடாய் தொடங்குகிறது

nathan

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி

nathan