28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
u 10 62790702
முகப் பராமரிப்பு

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்! உங்கள் முக அழகிற்கு குங்குமப்பூவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு.
உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்:

கேசர் என்றழைக்கப்படும் குங்குமப்பூவில் குணப்படுத்தும் தன்மைகள் ஏராளம். அது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் அதனால் நீங்கள் எப்போதுமே ஏங்கி வரும் பொன் போன்ற மினு மினுப்பை உங்களுக்கு கொடுக்கிறது. உங்கள் முகத்தில் பொலிவு பெற வீட்டிலேயே செய்த குங்குமப்பூ ஸ்க்ரப் அதனை கொடுக்கும்.
சிறிதளவு குங்குமப்பூவை 1 மேஜைக்கரண்டி பாலில் கலக்கி இந்த கலவையை வாரத்துக்கு இரு தடவை என உங்கள் முகத்தில் தேய்த்து வரவும்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

u 10 62790702

இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

நகச்சுத்தி வந்து பாதிக்கப்பட்ட நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றறில் குங்குமப் பூ மற்றும் வெண்ணை கலவையை போட்டு வந்தால் நகங்களை சீர்படுத்தி இழந்த அழகை மீண்டும் பெறலாம்.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.
சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு தேவதையாக மாறி விடுவார்கள்

Related posts

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்!

nathan

தக்காளி தரும் தங்க நிறம்!…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இப்படி பருக்கள் வர உங்க முடிதான் காரணம்னு உங்களுக்கு தெரியுமா?…

nathan

பெண்களின் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி?

nathan

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

nathan

முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்!!!

nathan

உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

முகத்தை ஜொலிக்க வைக்க இந்த இரண்டு பொருட்கள் கலந்த ஃபேஸ் மாஸ்க் உதவுமாம்!

nathan

கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பிரகாசமாக்கும் அழகு குறிப்புகள்…!!

nathan