அலங்காரம்ஃபேஷன்

பெண்களே தங்க நகைகளை பராமரிப்பது எப்படி?

gold

பெண்கள் நகைகளை விரும்பி அணியும் ஆர்வம் கொண்டவர்கள். தங்கம், முத்து, கற்கள் பதித்த நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பெண்களே தங்க நகைகளை பராமரிப்பது எப்படி?

தங்க நகைகள்

தங்க நகைகளை, தனித்தனிப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்போது தான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும்.

ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால், நகைகளில் கீறல் ஏற்படும், நிறமும் மங்கி விடும். தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் கூடாது.

gold

அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும். தங்க நகைகளை, பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் கழுவலாம்.

இவ்வாறு செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும். சிறிதளவு பற்பசை அல்லது தரமான பல்பொடியை, பழைய பிரஷில் வைத்து, நகைகளை சுத்தம் செய்யலாம்.

ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பூ அல்லது சோப்பு தூளும், மஞ்சள் தூளும் கலந்த நீரில், நகைகளை போட்டு, ஐந்து நிமிடம் சூடாக்கி விட்டு கழுவினால், நகைகள் அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.

கற்கள் பதித்த நகைகள்

கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால், ஒளி மங்கி விடும். இதற்கு சிறிது நீல நிற‌ பற்பசையை கற்கள் மீது பூசி, மென் தன்மையுடைய பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும்.

பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய்ப் பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.

இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, கற்களில் கீறல் விழுவதை தவிர்க்க, கற்கள் பதித்த நகைகளை சுத்தம் செய்ய டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும்.

கல் பதித்த நகைகளை, சுடுநீரில் போட்டு விடக் கூடாது. இவ்வாறு செய்தால், கற்களுக்கு சேதம் ஏற்பட்டு, அதன் கவர்ச்சி தன்மை நீங்கி விடும்.

வெள்ளி நகைகள்

வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல், மரப்பெட்டி அல்லது நகைப் பெட்டியில் வைத்தால் பளபளப்பாக இருக்கும்.

அலுமினியப் பாத்திரத்தில் நீரை கொதிக்க விட்டு, அதில் வெள்ளி நகைகளை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துத் துடைத்தால் அழுக்குகள் நீங்கி விடும்.

மிதமாக சுட வைத்த தண்ணீரில் சிறிதளவு டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில் வெள்ளி நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், நகைகள் பளபளக்கும்.

வெள்ளி கொலுசுகளின் பளபளப்பு மங்கி விட்டால் வெள்ளி கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் பிரஷ்ஷால் தேய்த்து கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.

முத்து நகைகள்

முத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்களில் கீறல் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது. முத்துக்கள் பதித்த நகைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துக்கள் ஒளியிழக்கும்.

மேலும், முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கி விடும்.

எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதால், அதன் பொலிவை பராமரிக்க முடியும். முத்து நகைகளை பயன்படுத்தாத போது, அவற்றை தூய்மையான வெள்ளை நிற பருத்தித் துணியினுள் வைக்க வேண்டும்.

Related posts

உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் தெரியுமா?இதை படியுங்கள்

nathan

ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் தேர்தெடுப்பது எப்படி?

nathan

மொடலிங் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு…! : சூப்பர் ஐடியாஸ்….

nathan

எளிதாக எளிய நகங்களை வடிவமைப்புகள்

nathan

பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கஷ்டம் தான் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல்வாகுக்கு ஏற்ற உடைகள்!

nathan

கைக்கடிகாரம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan

அழகு குறிப்புகள்:மணப்பெண் அலங்காரம்!

nathan

பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்

nathan