31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
கூந்தல் பராமரிப்பு

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க சின்ன வெங்காயம் !….

தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் சின்ன வெங்காயச்சாறு

தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதில் சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது எனலாம்.

இதற்கு காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் என்ற வேதிப் பொருள்தான். சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

முடி வளர கைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தி சோதனை செய்வதை விட்டு வெங்காயச் சாற்றை பயன்படுத்துவது பக்கவிளைவை ஏற்படுத்தாத ஒரு வழிமுறையாகும்.

வெங்காயச் சாறு தயாரிக்கும்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் நன்கு வெந்து அதிலுள்ள சாறு வெளியேறியவுடன் அந்த நீரை வடிகட்டி ஸ்கால்ப்பில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசினால் ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.

கொதிக்கும் தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலையில் தடவலாம்.

சூடு ஆறியபின்னர் வெங்காய சாறு கலந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி தலை குளித்து வந்தால் தலைமுடி வேரை வலுப்படுத்தி வளர்ச்சியடையச் செய்கிறது.

இதே போல தேனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்தும் தலைமுடிக்கு தடவலாம்.

2 வாரங்களில் முடி உதிர்வது குறைந்து 4 வாரத்தில் புதிதாக முடி வளரும்.

ஆலிவ் எண்ணெயை 15 நிமிடம் தலையில் தேய்த்து பின்னர் வெங்காயச் சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் ஷாம்பு போட்டு மிதமான சுடுநீரில் தலையை அலசினால் தலைமுடி நன்கு வளரும்.

Related posts

தலைமுடி வளர்ச்சிக்கு அருமருந்தாக விளங்குகிறது கறிவேப்பிலை எப்டி தெரியுமா???

nathan

எண்ணெய்தன்மை கொண்ட கூந்தல் பராமரிப்பு

nathan

பேன் தொல்லையை போக்க உங்களுக்கான தீர்வு!…

sangika

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க….!

nathan

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

nathan

வழுக்கையில் முடி வளர கொத்தமல்லி வைத்தியம்!

sangika

பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..!

sangika

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை

nathan

தலைமுடி உதிராமல் இருக்க

nathan