27.1 C
Chennai
Tuesday, Dec 3, 2024
valaijal
அலங்காரம்ஃபேஷன்

கண்ணாடி வளையல்களின் அற்புதங்கள்!…

பொதுவாக கண்ணாடி வளையல்கள் என்பது இந்த காலத்து பெண்களிடம் பேஷன் இல்லை என்றே கருதப்படுகிறது. இந்த கண்ணாடி வளையல்கள், மூதாட்டி கள் மட்டுமே உபயோகிக்கப்பட்டதாக இன்றைய நவநாகரீக பெண்கள் நினைக்கின் றனர்.

கண்ணாடி வளையல் அணிவது ஏன்

ப்ரேஸ்லட், பிளாஸ்டிக் வளையல்கள் போன்ற பல்வேறு புதுமைகள் வந்து விட்ட தால், பெண்கள் கண்ணாடி வளையல்களை முற்றிலுமாக மறந்துவிட்டனர் என்றே கூறலாம்.

ஆனால் இந்த கண்ணாடி வளையல்கள் அணிவதை எல்லா வேளையிலும் தவிர்ப்பது நன்றன்று.

valaijal

கண்ணாடி வளையல்களின் அற்புதங்கள்

கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன. அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன.

கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.

அந்த வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்டப் பார்வையையும்(திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது.

கர்ப்பணி பெண்களுக்கு அவசியம்

கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் ஆகும்.

இந்த விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் அடுக்குவது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களுக்கும் வளையல் அடுக்குவதுதான்.

கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணாடி வளையல்கள் அவசியம் என கூற காரணம் என்னவென்றால், நிறைமாத பெண்மணி மெல்ல நடந்துவரும் உடல் வாகைக் கொண்டிருப்பாள்.

அதனால் அவள் வரும் போது முன்னே, பின்னே அக்கம் பக்கத்தில் செல்பவர்கள் அவள் வருவதைப்புரிந்து கொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும் என்பதே ஆகும்.

இளம்பெண்களின் பாதுகாப்பு கவசம்

பொதுவாகவே பெண்கள் இப்படி கண்ணாடி வளையல்கள் அணிவது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாகவே இருந்து வந்திருக்கிறது.

விதவிதமான வளையல்கள்

கங்கன் எனப்படும் வளையல், கன்னிப்பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் ஒரு முக்கியமான ஆபரணமாகும்.

பழங்காலம் முதல் வளையல்கள் கண்ணாடி, சங்கு, தந்தம், அரக்கு போன்ற பல பொருட்களால் செய்யப்பட்டு வந்துள்ளது.

உடைந்த வளையல் கூடாது

கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது. ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்புள்ளது.

நிறங்களுக்கு என்னென்ன பலன்கள்?

பச்சைநிற வளையல், தேவியின் தத்துவம். இதை அணிவதன் மூலமாக பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது. மேலும் பச்சை நிறம், ஒரு பெண்ணின் கற்புத்திறத்தைக் குறிக்கிறது.

சிவப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும் நல்லனவற்றை அதிகம் கிரகிக்கக்கூடிய சக்தியும் கொண்டது.

சில ஜிகினா வேலைப்பாடுகள் உள்ள பச்சை, சிவப்புநிற வளையல்களில் தெய்வீக அதிர்வலை களை கிரகிக்கும் சக்தி குறைவாக உள்ளதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

இந்தியாவில் எப்படி?

பஞ்சாப் மாநிலத்தில் தந்தத்திலும் மேற்கு வங்காள மாநிலத்தில் சங்கிலும் வளையல் செய்யப்படுகிறது.

உத்திரப் பிரதேசத்தில் திருமணத்தின் போது மணப் பெண் சிவப்பு வண்ண புடவையும் கண்ணாடி வளையளும் அணிவது மிகவும் மங்களகரமாகக் கருதப்படுகிறது.

கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் அவற்றையே பச்சை வண்ணத்தில் அணிகிறார்கள்.

Related posts

கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்

nathan

பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கஷ்டம் தான்.

nathan

கன்னங்களின் அழகான ஒப்பனைகளுக்கான 5 முக்கிய குறிப்புகள்

nathan

மணப்பெண்க்கு டிப்ஸ்

nathan

ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் தேர்தெடுப்பது எப்படி?

nathan

ஒட்டியாணம் இளம் பெண்கள் அவசியம் அணிய வேண்டுமாம்!…

sangika

pregnancy announcement photoshoot – கர்ப்ப அறிவிப்பு போட்டோஷூட்

nathan

இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணிவது உடலுக்கு நல்லதா ?

nathan

மேக்கப் ரகசியம்

nathan