உடலை நல்ல வலிமையுடன் கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் இல்லையென்றால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நடைப்பயிற்சி மட்டும் செய்தால் போதும்…
நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்ற மாதம் தோரும் பணத்தை செலவு செய்து ஜிம் சேர்ந்து உங்கள் பணத்தை விணாக்காக்குவதை தவிர்த்துவிட்டு, வெறும் நடைப்பயிற்சியை மட்டும் மேற்கொண்டால் உடல் எடைக்குறையுமாம்…
பெரும்பாலும் நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் தான் எல்லா நோய்களும் ஏற்படுகிறது.
இதில் உடலுக்கு ஏற்ற பிஐஎம்யை இல்லாமல் அதிகமாக இருக்கும் இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
என்ன தான் நல்ல உணவுகளை சாப்பிட்டாலும், சில உடற்பயிர்சிகள் செய்ய வேண்டும். அதன் மூலம் தான் உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள வேண்டும்.
உடலை கட்டுக்கோப்பாக என்றால் ஜிம் எல்லாம் போய் டையட் எல்லாம் கடைப்பிடித்து வயிற்றில் 6பக்கை வரவலைப்பதில்லை. மாறாக சாதாரணமாக நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதுமானது.
நடைப்பயிற்சியையும் ஓரே மாதிரியாக செய்யமால், பல விதங்களில் செய்தால் மனதளவிலும், உடலளவிலும்வலிமை பெறுவதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.
நடைப்பயிற்சியை பூங்காக்களில் நண்பருடன் உரையாடி கொண்டே நடைப்பயிற்சி செய்தல், புல் தரை அல்லது மண் தரையில் நடப்பது, செல்லப்பிராணிகளுடன் நடப்பது, படிக்கட்டில் நடப்பது, நெடுந்தூர சாலைகள் அல்லது நகரங்களின் உள் நடப்பது உள்ளிட்ட பல விதங்களில் விதம் விதமாய் வித்தியசமாய் நடக்க வேண்டுமாம்.