29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 1546327858
மருத்துவ குறிப்பு

சூப்பரா பலன் தரும்!!நெஞ்சில் தேங்கியிருக்கிற நாள்பட்ட சளியை உடனடியாக வெளியேற்ற பாட்டி வைத்தியங்கள் இதோ…

பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டாலே சிலருக்கு சளி பிடித்துவிடும். அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால், அது தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்கிக் கொண்டே இருந்தால், அது நாளடைவில் அப்படியே நெஞ்சுக்குள் கட்டிக்கொண்டு சளியாகிவிடும். இதுதான் இப்படியே நாள்பட நாள்பட மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகியவையாக மாறிவிடுகிறது. இதற்கு மருத்துவம் பார்க்கிறேன் என்று ஆங்கில மருத்துவத்தை நாடுகின்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள். அது அப்போதைக்கான தற்காலிக தீர்வாக மட்டும் தான் இருக்குமேயொழிய நிரந்தர தீர்வாகாது

இந்த நாள்பட்ட சளியை சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.

வேப்பிலை சிறிதளவு வேப்பிலைகளை கையில் எடுத்துக் கொண்டு ஐந்து ஓமவல்லி இலைகளையும் சேர்த்து நன்கு மை போல அரைத்து நெற்றியில் பற்று போல இட்டு தடவி வந்தால், சளி தொல்லை தீர ஆரம்பிக்கும்.

நாள்பட்ட சளி தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் கலந்து கஷாயம் போல செய்து அதில் இனிப்புக்காக சிறிது தேன் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் அதன்மூலம் நாள்பட்ட சளியும் கரைய ஆரம்பித்துவிடும்.

கருந்துளசி இரண்டு வகையான துளசி இலைகள் உண்டு. ஒன்று வெண்துளசி. மற்றொன்று கருந்துளசி. கருந்துளசியை கொஞ்சம் நன்கு கசக்கிப் பிழிந்து அதிலிருந்து சாறெடுத்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால், நாள்பட்ட கடுமையான சளியும் கபம் மற்றும் மார்புச் சளியும் கரைய ஆரம்பிக்கும்.

ஆடாதொடை ஆடைதொடையைப் பற்றி நம் எல்லோருக்குமே பெரும்பாலும் தெரிந்திருக்கும். இந்த இலையை நிழலில் நன்கு உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதை தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தீர்கள் என்றால்,இருமலும் சளியும் தீர்ந்து போகும்.

கடுக்காய் கடுக்காய் என்பது மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்று. திரிபலா சூரணம், பொடி ஆகியவற்றின் முக்கியத்துவம் நம் எல்லோருக்குமே தெரியும். அந்த திரிபலாவில் உள்ள மூன்று மூலிகைகளில் மிக முக்கியமானது இந்த கடுக்காய். இந்த கடுக்காய் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். நன்கு உலர்த்திய கடுக்காய் மற்றும் நெல்லி பொடியையும் சம அளவில் கலந்து அதை தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். அப்படி காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் தீராமல் இருந்த சளி மற்றும் கபம் நீங்கும்.

தேங்காய் எண்ணெய் குழந்தைகளுக்கு சளி அதிகமானால் மூச்சுத்திணறல் ஏற்படும். அப்படி குழந்தகள் மூச்சுவிட சிரமப்படுகிற பொழுது, குழநதைகளுக்கு மூக்கின் மேல் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி வந்தீர்கள் என்றால், மூச்சு விடுவது எளிதாகும். சளியால் உண்டாகும் சிரமம் குறையும். தேங்காய் எண்ணெயை சுட வைத்து அதனுடன் கற்பூரம் சேர்த்து குழைத்து நெஞ்சில் தடவினால் நீண்ட நாள் கட்டியிருக்கும் நெஞ்சு சளி கரைந்துவிடும்.

அமுக்கிரா கிழங்கு அமுக்கிரா கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் வேராகவோ அல்லது பொடியாகவோ கிடைக்கும். அதை வாங்கி தினமும் இரவு நேரத்தில் பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் தீராத கபமும் கூட தீர்ந்து போகும்.

தூதுவளை தூதுவளை மிக முக்கியமான மூலிகை இலைகளில் ஒன்று. அந்த இலையை காயவைத்து பொடியாக கிடைப்பதையும் வாங்கி பாலில் கலந்து குடிக்கலாம். அதைவிட தூதுவளை இலையை பச்சையாக சாப்பிட்டு பயன்படுத்துவது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும். இந்த தூதுவளையை ரசமாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிட்டு வந்தால் சளி தீர ஆரம்பிக்கும்.

ரோஜா சளியைக் கூட ஏதாவது மருந்து சாப்பிட்டு சரிசெய்து விட முடியும். ஆனால் மூக்கடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? அதுவாக சரியானால் தான் உண்டு. ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. நாட்டு ரோஜாப்பூவை நன்கு அதன் வாசனையை உள்ளிழுத்து நுகர்ந்து பார்த்தாலே போதும். மூக்கடைப்பு குணமாகிவிடும்.

மாதுளை பொதுவாக சளி பிடித்திருந்தால் பழங்கள் சாப்பிடக் கூடாது. சளி அதிகமாகிவிடும் என்பார்கள். ஆனால் சிட்ரஸ் பழங்கள் சளி பிடித்திருக்கும் சாப்பிடுவது நல்லது. அதிலும் மாதுளம்பழம் சளிக்கு மிகவும் நல்லது. மாதுளம் பழச்சாறெடுத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாருடன் கலந்து சாப்பிட்டால் சளி சரியாகும்.

கற்பூரவள்ளி கற்பூரவள்ளி இலைகள் ஓமவள்ளி இலை என்றும் அழைக்கப்படும். இந்த கற்பூரவள்ளி இலைகளை லேசாகத் தீயில் காட்டி சூடேற்றி நெற்றியில் பற்று போட்டீர்கள் என்றால், நெற்றியில் நீர் கோர்த்திருப்பது சரியாகும். நீர் வெளியேறிவிடும்.

cover 1546327858

-Boldsky

Related posts

உங்களுக்கு தெரியுமா கேன்சரில் இருந்து எம்மை பாதுகாப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும் சில இயற்கை வழிகள்!

nathan

அவள் உங்களை கிறுக்குத்தனமாக காதலிக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் 7 விஷயங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நேரத்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்!

nathan

புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும் தெரியுமா!

nathan

மூல நோயிலிருந்து முற்றிலும் குணம் தரும் கருணைக்கிழங்கு

nathan

உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கும் உணவுகள்!!!

nathan

உங்களுக்கு அடிக்கடி ‘ஏவ்’ வருதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்கள் மார்பக சுய பரிசோதனை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

nathan