24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
rava laddu
அறுசுவைஇனிப்பு வகைகள்

சுவையான ரவா லட்டு!…

தேவையான பொருட்கள்

ரவை – ½ கிலோ
சர்க்கரை – ½ கிலோ
நெய் – 6 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 50 கிராம்
தேங்காய் – 1
ஏலக்காய் – 12
பால் – 250 மில்லி லிட்டர்

rava laddu

செய்முறை:

முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும். ஓரளவிற்கு விடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்

பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும். சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம். சுவையான ரவா லட்டு தயார்.

Related posts

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம்…

sangika

சுவையான கோழி கட்லட் இலகுவான முறையில் வீட்டிலேயே செய்யலாம்…

sangika

ப்ரெட் ஜாமூன் : செய்முறைகளுடன்…!

nathan

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan

வெஜ் பிரியாணி

nathan

சுவையான மட்டன் கடாய்

nathan

சுவையான இஞ்சி புளி தொக்கு!

sangika

காரட்அல்வா /Carrot Halwa

nathan