pannir kadlad
அறுசுவைசமையல் குறிப்புகள்

சுவையான பன்னீர் கட்லெட்….

தேவையான பொருட்கள்

பன்னீா் – 500 கிராம்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 7
கறிவேப்பிலை – 2 கொத்து
பூண்டு – 1 ½மேஜைக்கரண்டி
இஞ்சி – 1 ½மேஜைக்கரண்டி
சோம்பு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1½ மேஜைக்கரண்டி
நல்ல மிளகு தூள் – 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 3

பொரிக்க தேவையான பொருட்கள்:

சோள மாவு – 4 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பிரட் தூள் – 1½ கப்
எண்ணெய் – பொரிக்க

pannir kadlad
செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு சிறிது உப்பு சேர்க்கவும் ஒரு குக்கரில் உருளை கிழங்குடன் நீர் சேர்த்து வேக வைக்கவும்.2 விசில் வரும் வரை வைக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்க்கவும் அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை வெங்காயக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும். மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.

பின்பு உருளைகிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும். பின்பு பன்னீர் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும். பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும். பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.

கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு எடுத்து அதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

Related posts

சீஸ் கேக்

nathan

சிக்கன் பிரியாணி செய்முறை..

nathan

சுவையான சில்லி முட்டை கிரேவி

nathan

குல்கந்து ரவை அல்வா

nathan

சீனி சம்பல்

nathan

உருளைக்கிழங்கு மசால் தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி?….

sangika

கருப்பட்டி வட்டிலப்பம்/ Jaggery Wattalappam recipe in tamil

nathan

இட்லி, பரோட்டாவுடன் சூடாக பரிமாற தக்காளி கார சால்னா…..

sangika

சுவையான மாங்காய் சாம்பார்

nathan