23.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
monopas
ஆண்களுக்குஅழகு குறிப்புகள்

இவ்வாறான பெண்களுடனான உறவில் சிறந்து விளங்குவார்களாம்……

சாமுத்திரிகா இலட்சணம் என்பது நமது முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட ஒரு அற்புத கலையாகும். இதன் மூலம் உடலில் உள்ள குறியீடுகளை வைத்தே அவர்களின் எதிர்காலம், ஆரோக்கியம், அவர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் என அனைத்தையும் கண்டறிந்து விடலாம்.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது உண்மையான ஒன்றுதான் ஏனெனில் இதனை குறித்து இன்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சாமுத்திரிகா இலட்சணத்தில் உடலின் ஒவ்வொரு பாகமும் முக்கிய இடத்தை வகிப்பதாகும் . பெண்களுக்கு அவர்கள் உடலில் உள்ள மச்சங்கள், மச்சங்கள் இருக்கும் இடங்கள், பாதம் என அனைத்துமே அவர்களை பற்றி கூறுவதாக இருக்கும்.

ஆண்களை பொறுத்த வரையில் மச்சத்தை விட முக்கியமானது என்றால் அது விரல்கள்தான். ஏனெனில் ஒரு ஆணின் விரல்களே அவன் ஆரோக்கியம், ஒழுக்கம் போன்றவற்றை பற்றி கூறிவிடும்.

ஆராய்ச்சிகள்

சாமுத்ரிகா இலட்சணத்தை அடிப்படையாக கொண்டு உலகின் பல்வேறு மூலைகளிலும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின் மூலம் பல உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளது என்னவெனில் ஆண்களின் விரலுக்கும், அவர்களின் ஆரோக்கியதிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கிட்டதட்ட இவர்கள் கூறுவதற்கும், சாமுத்திரிகா சாஸ்திரத்திரம் கூறுவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் கையை நன்கு விரித்து பார்த்து உங்களின் விரல்களின் நீளத்தை பாருங்கள். அதுவே உங்களின் பாலியல் ஆரோக்கியத்தை பற்றி கூறிவிடும்.

monopas

பெண்களுடனான உறவு

பல ஆண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஆண்களின் ஆள்க்காட்டி விரலானது மோதிர விரலை விட சிறியதாக இருந்தால் அவர்கள் பெண்களுடனான உறவில் சிறந்து விளங்குவார்களாம்.

ஆண்கள் கருவில் இருக்கும்போது ஏற்படும் பாலியல் ஹார்மோன் மாற்றங்களின் வெளிப்பாடு இதுவாகும்.

பாலியல் ஹார்மோனான டெஸ்டிஸ்ட்ரோன் அளவு அதிகமாக இருந்தால் ஆண்களின் மோதிர விறல் நீளமாக வளரும்.

ஆணுறுப்பின் அளவு

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மோதிர விரலானது ஆள்காட்டி விரலை விட பெரியதாக இருந்தால் அது ஆணுறுப்பு பெரியதாக இருப்பதற்கான அறிகுறி என்று கண்டறியப்பட்டுள்ளது.

விரல்கள் இப்படி உள்ள ஆண்களின் ஆணுறுப்பானது விரைப்படைந்த நிலையில் பெரியதாக இருக்கும்.

ஆள்காட்டி விரல் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ ஆணுறுப்பின் அளவு அவ்வளவு பெரியதாக இருக்கும். இதுவும் கருவில் இருக்கும்போது ஏற்படும் ஹார்மோன் விளைவுதான்

வசீகரமான முகம்

இந்த ஆய்வில் மேலும் தெரிந்த தகவல் என்னவெனில் ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட சிறியதாக இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் வசீகரமான முகத்தை கொண்டிருப்பார்கள் என்று கூறுகிறது.

ஆண் குழந்தை கருப்பையில் இருக்கும்போது அவர்கள் மீது ஏற்படும் அதிகளவு டெஸ்டிஸ்ட்ரோன் சுரப்பு அவர்களுக்கு வசீகரமான முகத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

புத்திக்கூர்மை

ஆள்காட்டி விரல் நீளம் குறைவாக உள்ள ஆண்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்களாம்.

அமெரிக்காவில் ஆண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு நடைபெறும் ஒரு கடினமான தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலான ஆண்களுக்கு மோதிர விரலை விட ஆள்காட்டி விரல் சிறியதாக இருப்பது கண்டறியப்பட்டது.

விரல்கள் இப்படி உள்ளவர்கள் கணிதம் மற்றும் தர்க்க சிந்தனைகளில் சிறந்து விளங்குவார்கள்.

புரோஸ்டேட் புற்றுநோய்

மோதிர விரலை விட ஆள்காட்டி விரல் நீளம் குறைவாக உள்ள ஆண்களுக்கு பல சாதகங்கள் இருந்தாலும் அவர்களுக்கு சில பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

குறிப்பாக விரல் இப்படி உள்ள ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் ஆரோக்கியமான 3000 ஆண்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வு முடிவுகள்

3000 ஆண்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வில் மோதிர விரலும், ஆள்காட்டி விரலும் ஒரே நீளத்தில் இருக்கும் ஆண்களை விட ஆள்காட்டி விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு 33 சதவீதம் அதிகமாக உள்ளது என்னும் அதிர்ச்சிகரமான செய்தி தெரியவந்துள்ளது.

ஆனால் ஆரோக்கியமான பழக்கங்கள் இருக்கும் ஆண்கள் இதனை நினைத்து பயப்பட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

Related posts

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

அரண்மனை போல மாறிய பிக் பாஸ் வீடு !ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு!

nathan

முகம் பிரகாசமாக ஜொலிக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தி செய்யக்கூடிய 4 வகையான ஃபேஸ் பேக்கினை தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க…

nathan

எண்ணைய் பசை சருமத்திற்கு…!

nathan

இட்சத்தில் ஒரு குழந்தைக்கு நடக்கும் அதிசயம் : இன்ப அதிர்ச்சியில் பெற்றோர்!!

nathan

அழகு ,கன்னத்தின் அழகு அதிகரிக்க..,BEAUTY INTAMIL

nathan

அழகு குறிப்புகள்:மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

nathan

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள் || waxing after skin irritating clear tips

nathan

புருவம் அடர்த்தியாக வளர இத செய்யுங்கள்!…

sangika