25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
lemon1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே போதும், சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்……

ஒவ்வொருவருக்குமே நாம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாக மாற அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணம் செலவழிப்பார்கள்.

அழகு என்பது வெளிப்புறத் தோற்றத்தில் இல்லாவிட்டாலும், இன்றைய காலத்தில் அழகாக காணப்படாவிட்டால், யாரும் மதிக்கவேமாட்டார்கள். ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

மேலும் பலர் அழகு என்பது வெள்ளையாக இருந்தால் தான் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அழகு என்பது சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல், சருமத்தை அழகாக மென்மையாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளது. அதற்காக

தினமும் 10 நிமிடம் செலவழித்தாலே போதும், சருமமானது அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

lemon1

வெள்ளையாக மாற பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம்களால் ஏற்படும் பக்க விளைவுகள்! அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தாலே, நல்ல அழகான சருமத்தைப் பெறலாம்.

1 எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

2 எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

3 எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும்.

இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

4 ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

5 பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.

6 வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

7 ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

8 எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

ஆண்மை மிகுதிப்பட்டு, நமது கட்டுப்பாட்டுக்குள் வர தினமும் இதை செய்து வாருங்கள்….

sangika

இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்……

sangika

அழகு குறிப்புகள்:சரும பாதிப்பை தடுக்க…

nathan

சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அன்றாட விஷயங்கள்!!!

nathan

குழந்தைகளுக்கான குளியல் பொடிகளை தயாரித்து பயன்படுத்துங்கள்..

nathan

முகத்தை கழுவும்போது இதெல்லாம் நீங்கள் செய்கிறீர்களா?

nathan

வாரம் ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும்!

nathan

சிலருக்கு முழங்கை, முழங்கால்களில் கருமைப் படர்ந்திருக்கும். அந்த கருமை நீங்க:

nathan

பாதங் கள் பாதுகாக்க‍ப்படுவதால் உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்!….

sangika