28.1 C
Chennai
Tuesday, Jan 21, 2025
wed1
மணப்பெண் அழகு குறிப்புகள்அழகு குறிப்புகள்ஆரோக்கியம் குறிப்புகள்

கற்பு, கன்னி தன்மை போன்ற விஷயங்கள் பெண்களுக்கு மட்டும் தானா..?

வர்ஜின்!

இந்த வார்த்தையை கேள்விப்பட்ட பலருக்கும் இதன் அர்த்தமும், இதை பெரிதும் யார் பயன்படுத்துவார்கள் என்பதையும் பற்றி நன்றாகவே தெரிந்து இருக்கும்.

பெரும்பாலும், சிங்கிள்ஸ் தான் வர்ஜினாக இருப்பார்கள் என்கிற கட்டமைப்பும் இங்குள்ளது. ஒரு ஆணோ ஒரு பெண்ணோ இது வரை தனது கன்னித்தன்மையை இழக்கவில்லை என்கிற நிலை தான் “வர்ஜின்”!

இன்றும் அன்றும்!

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை முதலிரவு முடிந்ததும் இருவருக்கும் முதலிரவு நடந்த படுக்கையில் இரத்த கரை உள்ளதா..? என்கிற அபத்தமான ஒரு சடங்கு இருந்தது.

இன்றும் பல கிராமங்களில் இதே நிலை தொடர்கிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இதே அபத்தம் அரங்கேறி வருகிறது.

யார் அவர்கள்?

மகாராஷ்டிராவில் கன்ஜார்பாத் என்கிற சமூக மக்கள் இன்றளவும் இதே நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். முதலிரவு முடிந்ததும் அப்பெண் தனது படுக்கையில் ஏற்பட்டள்ள இரத்த கரையை கணவன் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆதாரமாக காட்ட வேண்டுமாம்.

wed1

அபத்தம்!

இப்படி ஒரு அபத்தமான நிலையால் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் சமூக ஊடங்கங்களில் தங்களது மன குமுறல்களை தெரிவித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிரா அரசு இது போல கன்னி தன்மையை சோதிக்கும் முறையை யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்களும் “பலாத்கார குற்றவாளிகளே” என புதுவித நடவடிக்கையை எடுத்துள்ளது.

இப்படிப்பட்ட அபத்தங்கள் நிகழ கன்னி தன்மையின் மீதுள்ள சிலபல கட்டுக்கதைகளே காரணம். முதலில் நாம் அவற்றை முழுவதுமாக அறியலாம்.

கன்னி தன்மை!

பெண்ணின் பிறப்புறுப்பில் உள்ள ஹைமென் என்கிற திசு கிழிந்தாலே கன்னி தன்மை போய் விட்டது என்கிற மனப்பாங்கு பலரிடம் உள்ளது. ஆனால், உண்மை அப்படி இல்லை! ஒரு பெண் கன்னி தன்மை இழந்து விட்டார் என்பதை இதை வைத்து கண்டு பிடிக்க இயலாது.

காரணம்?

ஹைமென் திசு மிக மெல்லிய திசு. இது கிழிவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது குதித்து விளையாடினாலோ, சைக்கிள் ஒட்டினாலோ, வேலைகளை அதிகம் செய்தாலோ இந்த திசு எளிதில் கிழிந்து விடும். இதை புரிந்து கொள்ளாமல் அந்த பெண்ணின் மீது பழி சுமப்பது மனித தன்மையே இல்லை.

சுய இன்பம்

பெண்கள் சுய இன்பம் காண்பதால் பல நன்மைகள் உண்டாகிறது என ஆய்வுகளே சொல்கின்றன. அப்படி இருக்க பெண்கள் சுய இன்பம் காண்பதால் அவர்களின் கன்னி தன்மை கேட்டு விடும் என நம்புகின்றனர். இதுவும் பல ஆண்டுகளாக கட்டு கதையாகவே உள்ளது.

பெண்ணின் பிறப்புறுப்பு

பலர் பெண்களின் பிறப்புறுப்பு இலகுவாகினாலோ அல்லது பெரிதாக இருந்தாலோ அதையும் கன்னி தன்மை அற்றதாக கருதுகின்றனர். உண்மை என்னவென்றால், பெண்கள் பல ஆண்டுகள் உடலுறவில் ஈடுபட்டால் கூட அவர்களின் பிறப்புறுப்பு அவ்வளவு எளிதில் பெரிதாகாது. சிலருக்கு பிறப்பிலே இது போன்று இருந்தால் அதை கன்னி தன்மை இல்லை என எடுத்து கொள்ள கூடாது.

வலி!

முதலிரவின் போது ஒரு பெண் உறவு கொள்ளும் போது அவருக்கு இரத்தமும் வலியும் உண்டாகினால் தான் அப்பெண் கன்னி தன்மையுடன் இருக்கிறார் என பலர் நம்புகிறார்கள். ஆனால், இது வடிகட்டிய போய். ஒவ்வொரு பெண்களின் உடலுக்கும் ஏற்ப இது மாறுபடும்.

சில பெண்களுக்கு முதல் முறை வலியும் இரத்தமும் ஏற்படலாம். சில பெண்களுக்கு இது உண்டாகாமல் இருக்கலாம். ஆதலால், வலியை வைத்து கன்னி தன்மையை கண்டுபிடிக்க இயலாது.

ஆண்களுக்கு!

கற்பு, கன்னி தன்மை போன்ற விஷயங்கள் பெண்களுக்கு மட்டும் தானா..? என்கிற கேள்விக்கும் பதில் உண்டு. பெண்களுக்கு எப்படி கன்னி தன்மை உள்ளதோ, அதே போன்று ஆண்களுக்கும் இதே கன்னி தன்மை உள்ளது.

ஆனால், பெண்களுக்கு சற்று எளிய பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்த்து விடலாம். ஆனால், ஆண்களுக்கு இது மிக கடினமான ஒன்று என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கற்பு!

மொத்தத்தில் கற்பு என்பது நாமே கட்டமைத்து கொண்ட ஒன்று தான். எதுவாக இருந்தாலும் உங்கள் துணை உங்களிடம் உண்மையாக இருக்கிறார்களா? என்பதை பொருத்தே கன்னி தன்மையை உங்களால் அறிய இயலும்.

பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள திசு கிழிந்தால் கற்பு இல்லாதவர் என்கிற பழமை எண்ணங்களை முற்றிலுமாக நீக்கி, புதுமைவாதியாக வாழுங்கள் நண்பர்களே.

Related posts

25 வருட நட்பு, ஆனா எனக்கு முரளி துரோகம் செய்துவிட்டார் -தேவயானி கணவர் ராஜகுமார்.

nathan

உஷாரா இருங்க…! இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் தவறான ஒருவரை திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தமாம்…

nathan

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால் இத செய்யுங்கள்!….

sangika

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

குறிப்பிட்ட வயதுக்கு மேல் உடல் எடை அதிகரிக்க காரணம்!….

nathan

ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் மிக சிறந்த நண்பனை கவனிக்காது விடலாமா?..

sangika

அதிர்ச்சி தகவல்கள் குளிர்பானங்கள் அதிகமாக குடிப்போர் கவனத்திற்கு.!

nathan

கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan

குங்குமப்பூவில் அழகின் ரகசியம்

nathan