28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
fat1
எடை குறையஆரோக்கியம்

தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறைவதை உங்களால் உணர முடியும்….

எடை குறைப்பு

எடையைக் குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் நினைக்கிறீர்களோ அவ்வளவு வேகமாகக் குறைந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தானே!. உண்மை என்ன தெரியுமா? எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது.

ஆனால் என்ன சில டயட் (உணவு ரீதியான) சார்ந்த மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அதற்கான முயற்சியை துரிதப்படுத்தலாம்.

செய்ய வேண்டியது

தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தொடர்ந்து வெந்நீர் மட்டும் குடிப்பது இதுபோன்ற பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்தீர்கள் என்றால் உடல் எடை குறைவதைத் துரிதப்படுத்த முடியும். இப்படி நிறைய சிரமங்களுக்குப் பிறகு தான் எடையைக் குறைக்க முடியும். ஆனால் இந்த கட்டுரையில் ஓரு மிகச்சிறந்த பலனைத் தரக்கூடிய வீட்டு வைத்திய முறையைத் தான் பார்க்கப் போகிறோம்.

fat1

பூண்டும் தேனும்

பச்சை பூண்டும் தேனும் சேர்த்து சாப்பிடுவது என்பது அத்தனை சுவையான விஷயம் இல்லை தான். என்றாலும் கூட, இது உடல் எடையை வேகமாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு மட்டுமல்லாது இது உங்களுடைய ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது.

எப்படி நடக்கும்?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சையாக பூண்டை தட்டி அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் உங்களுடைய ஜீரண மண்டலம் துரிதமாக வேலை செய்யும். அதோடு உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படும்.

பூண்டும் தேனும் மிக ஆரோக்கியம் நிறைந்த பொருள். இவற்றை நாம் எந்த உணவோடு வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட முடியும். அப்படிப்பட்ட இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து சாப்பிடுவதால் மிதமிஞ்சிய ஆரோக்கிய விஷயங்கள் நடக்கும்.

எப்படி செயல்படுகிறது?

பச்சை பூண்டும் தேனும் காமினேஷன் என்பது உங்களுடைய உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு போகிறது. தோடு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதோடு கொழுப்பு சேராமலும் பார்த்துக் கொள்கிறது.

சளி, இருமல் மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

ஜீரண சக்தியை துரிதப்படுத்துவதோடு ஜீரணக் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களையும் சரி செய்கிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் அத்தனையையும் வெளியேற்றுகிறது.

வேறு நன்மைகள்

கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கிறது. அதோடு இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் தீர்க்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இது இருக்கும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

நான்கு பல் பூண்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக, துருவியோ அல்லது நசுக்கியோ எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பத்து நிமிடங்கள் வரை ஊற விடவும். தேன் பூண்டுக்குள் நன்கு இறங்க வேண்டும். அல்லது இதை இரவிலே கூட செய்து வைத்துக் கொள்ளலாம்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறைவதை உங்களால் உணர முடியும்.

Related posts

பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்கள்!…

sangika

உலர்திராட்சையில் உடலுக்கு வலிமை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன

nathan

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்….!!!

nathan

உடல் எடையை குறைக்க தினமும் சாப்பிட வேண்டிய சில இந்திய உணவுகள்!!!

nathan

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

nathan

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

nathan

உடல் எடையை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம் weight loss tips in tamil

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்…..!

nathan

உடல் எடையை இப்படி கூட குறைக்க புதுவிதமான உருளைக் கிழங்கு வைத்தியம்!!

nathan