29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
மருத்துவ குறிப்பு

சுகப்பிரசவம் நடக்க வீட்டு வேலை செய்யுங்க

சுகப்பிரசவம் நடக்க வீட்டு வேலை செய்யுங்க
சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும்.பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும்.இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

Related posts

நோய்களை நீக்கி உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் வெந்தயம்

nathan

உங்களுக்கு தெரியுமா தோல் வியாதிகளை குணப்படுத்தும் மருதாணி…!

nathan

உங்களுக்கு தெரியுமா வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணை குணமாக்கும் கோவைக்காய்…!

nathan

சளி குறைய – பாட்டி வைத்தியம்!

nathan

உள்காயம் அறிவது எப்படி?

nathan

குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆஸ்துமாவை குணமாக்கும் தேன்

nathan

தள்ளாட்டத்தை ஏற்படுத்தும் தலைசுற்றல்

nathan

மாதவிலக்கு கோளாறை சரிசெய்யும் பண்ணைகீரை

nathan