27.3 C
Chennai
Sunday, May 19, 2024
face care
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்க இதை செய்யுங்கள்!…

பெரும்பாலும் நாம் சமையலுக்கு சில குறிப்பிட்ட எண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்துவோம். இந்த எண்ணெய் வகைகள் அனைத்துமே நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் இருத்தல் வேண்டும். இல்லையெனில் நமது உடல் நலம் தான் பாதிக்கப்படும்.

நம்மில் சிலர் மட்டுமே கடுகு எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவர். இந்த எண்ணெய்யில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதை நாம் முக பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாகும். இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

face care

கடுகு எண்ணெய்யின் ஆற்றல்..!

கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.

கலவை குறிப்பு…

முகம் வெண்மையாக மாற இந்த கலவை குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை…

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

கடுகு எண்ணெய் 1 ஸ்பூன்

உப்பு சிறிது

செய்முறை :-

முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் உப்பு சேர்த்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இது முகத்தை பளபளவென மாற்றி அழகான சருமத்தை தரும்.

கரும்புள்ளிகள் நீங்க

முகத்தில் கரும்புள்ளிகள் வராமல் இருக்க இந்த குறிப்பு உதவும். இதற்கு தேவையானவை…

கடுகு எண்ணெய் 1 ஸ்பூன்

கடலை மாவு 1 ஸ்பூன்

தயிர் 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

தயாரிப்பு முறை

கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி மெல்ல மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பருக்களை ஒழிக்க

முகத்தின் அழகை கெடுக்கும் இந்த பருக்களை ஒழிக்க எளிய வழி உள்ளது. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து போகும்.

அழுக்குகளை நீக்க

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்க இந்த குறிப்பு பயன்படும். இதற்கு தேவையானவை…

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

சந்தன தூள் 1 ஸ்பூன்

குங்குமப்பூ சிறிது

கடலை மாவு 1 ஸ்பூன்

கடுகு எண்ணெய் 2 ஸ்பூன்

தயாரிப்பு முறை…

மஞ்சள் தூள், சந்தன தூள், குங்குமப்பூ ஆகியற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின் கடலை மாவு மற்றும் கடுகு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்கி விடும்.

Related posts

சருமத்தை மென்மையாக்கும் பழங்கள் fruit facial tips in

nathan

உங்களுக்கு தெரியுமா வால்நட்ஸ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள்!

nathan

அப்பானார் செல்வராகவன்!செல்வராகவன் வீட்டிற்கு புதிய விருந்தாளி: திரையுலகினர் வாழ்த்து!

nathan

சூப்பர் டிப்ஸ் சரும வறட்சியை போக்கணுமா?

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

nathan

மூக்கை சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

உடல் புத்துணர்ச்சி பெற என்ன செய்யலாம்

nathan

கருமையை நீக்கி இளமை தரும் சாமந்திப்பூ

nathan

பாதவெடிப்பு அதிக வலி திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா?

nathan