உங்கள் துணையை பற்றிய செய்திகள்
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தன்னுடைய துணையை பற்றிய தகவல்களை ஒருபோதும் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உங்கள் துணையை பற்றி பேசலாம், ஆனால் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை கூறவேண்டிய அவசியமில்லை. உங்கள் நண்பர்களும் அதை தெரிந்து கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை.
உறவு சிக்கல்கள்
உங்கள் முழுமையான நம்பிக்கைக்குரிய நண்பராக இல்லாத பட்சத்தில் உங்களின் உறவு சிக்கல்களை மற்றவர்களிடம் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் பிரச்சினைகள் மற்றவர்களுக்கு இதன்மூலம் தெரிந்துவிடும். பிறகு உங்கள் பிரச்சினைகள் புறம்பேசுபவர்க்ளுக்கு தீனியாக அமைந்துவிடும்.
நெருக்கமான விஷயங்கள்
எவ்வளவுதான் முக்கியமான நண்பராக இருந்தாலும் உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையே நடக்கும் நெருக்கமான விஷயங்களை அவர்களிடம் கூறவேண்டுமென்ற அவசியமில்லை. அவ்வாறு கூறினால் அது உங்களுக்கு எதிரான ஆயுதமாக கூட பின்னாளில் மாறலாம்.
மகிழ்ச்சியான உறவு
அதேபோல நீங்கள் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக உள்ளதை மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது நல்ல செய்திதான். ஆனால் அதை மற்றவர்களிடம் காட்டுவதில் என்ஹா பயனும் இல்லை, மாறாக தீமைகள் மட்டுமே ஏற்படும்.
கடந்த கால நிகழ்வுகள்
நாம் அனைவருமே கடந்த காலங்களில் நல்லது, கெட்டது என அனைத்தையுமே செய்திருப்போம். தேவை ஏற்படும் வரை உங்கள் கடந்த கால நிகழ்வுகளை மற்றவர்களிடம் கூறாதீர்கள். இதனால் உங்களுக்கு தீமைகள் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். நீங்கள் செய்த நல்லதே கூட உங்களுக்கு எதிரான ஆயுதமாக மாறலாம்.
விசித்திரமான பழக்கங்கள்
நம்மில் பலருக்கும் சில வித்தியாசமான பழக்கங்கள் இருக்கலாம், தூக்கத்தில் நடப்பது, இருட்டை கண்டால் பயப்படுவது போன்ற பழக்கங்கள் இருக்கலாம். உங்கள் துணையை தவிர இதுபோன்ற தகவல்களை மற்றவர்களிடம் கூற தேவையில்லை.
நிதி நிலை
உங்கள் நண்பர்களுக்கு பண உதவி செய்வதில் எந்த தவறும் இல்லை. சொல்லப்போனால் பணக்கஷ்டத்தில் நண்பர் இருந்தால் அவருக்கு உதவ வேண்டியது உங்கள் கடமையாகும். அதற்காக உங்களிடம் எவ்வளவு இருப்பு உள்ளதெல்லாம் என்று கூற தேவையில்லை.
விலை
நீங்கள் வைத்திருக்கும் ஏதேனும் விலைமதிப்பில்லாத பொருளின் விலையை உங்கள் நண்பர்கள் கேட்க்கும்போது அதன் உண்மையான விலையை கூறவேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் இதனால் ஏற்படும் பொறாமையுணர்வு உங்கள் நட்பில் விரிசலை ஏற்படுத்தலாம்.
காயப்படுத்தும் சொற்கள்
உங்களுக்கு உங்கள் நண்பர்களை மிகவும் பிடிக்கும் என்றால் எவ்வள வு கோபமாய் இருந்தாலும் அவர்களை அடிப்பதையோ அல்லது காயப்படுத்தும் படி பேசுவதையோ தவிர்க்க வேண்டும். உங்களின் கோபத்தை வெளிக்காட்ட ஆயிரம் வழிகள் உள்ளது அதற்கு அடிப்பதோ, திட்டுவதோ வழியல்ல.
பாஸ்வேர்டு
உங்களின் பாஸ்வேர்டுகளை ஒருபோதும் உங்கள் நண்பர்களிடம் கூறாதீர்கள். எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சரி உங்கள் தனிப்பட்ட தகவல்களை கூறக்கூடாது, இது பாதுகாப்பு பிரச்சினைகளை உண்டாக்கும். ஒருவேளை உங்கள் நண்பர்களுக்கே தெரியாமல் அது மற்றவர்களுக்கு தெரிய வரும்போது உங்களுக்குத்தான் பிரச்சினைக்கு வரும்.