பொதுவாக உடல் எடையைக் குறைக்க தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொண்டு, டயட்டை மேற்கொள்வோம். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
இவ்வாறு ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் போது, உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். அதே சமயம் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
தற்போது உடல் எடையை எளிமைய குறைக்க நீங்கல் ஐஸ் தண்ணீரில் குளித்தால் போதும் என்னென்றால் இதில் உள்ள குளிர் உடலின் வெப்பநிலையை மற்றும் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து கலோரிகளை அதிகளவில் கரைக்கச் செய்யும்.
Weight Loss Tips : உடம் எடை குறைய டிப்ஸ்
பல முயற்சிகளை மேற்கொண்டு எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் இந்த 4 விதையை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும். உடல் எடை இன்னும் வேகமாக குறையும்
1. பூசணி விதை (Pumpkin Seeds) :
இந்த விதையில் புரோட்டீன் மற்றும் நாற்ச்சத்து அதிகமாக உள்ள காரணத்தினால் உங்களின் பசி கட்டுப்படும். மேலும் இவற்றை கூடுதலாக ஸிங்க் உள்ளதால் ஜீரன சக்தியை அதிகரிக்கும்.
இந்த விதையை, அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது எண்ணை இல்லாமல் வருத்து லேசாக உப்பு தூவி சாப்பிடலாம்.
2. ஃப்ளேக் சீட்ஸ் (Flaxseeds) :
இந்த விதை உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். பசி வரவைக்கும் ஆசிட்டை கட்டுக்குள் வைத்திருக்கும்.
இதனை ஒரு வானலியில் வருத்து உப்பு தூவி அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடி செய்து காலை பல் தேய்த்தவுடன் சுடு தண்ணியில் போட்டு வடிகட்டி குடிக்கலாம். சிலர் இதனை பொறியலிலும் சேர்த்துக் கொள்வார்கள்.
3. சியா விதை (Chia Seeds) :
இந்த விதையை தமிழில் துளசி விதை அல்லது சப்ஜா விதை என்றும் சொல்வார்கள். இதில் அமினோ ஆசிட், புரோட்டீன் அதிகமாக உள்ளது.
ஒரு நாளைக்கு 2 டீ ஸ்பூன் சப்ஜா விதை உட்கொண்டால் உடல் எடை வேகமாக குறையும். இதை சூப், சாலட் என எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.
இதை உபயோகப்படுத்துவதும் சுலபம். ஒரு கப் தண்ணீரில், 2 ஸ்பூன் விதையை போட்டு சுமார் 10 நிமிடம் வைத்தால் போதும்.
அது நன்கு பொங்கி மென்மையாக இருக்கும். இதனை எலுமிச்சை ஜூஸ் உடனும் அருந்தலாம்.
4. சூர்ய காந்தி பூ விதை (Sunflower Seeds)
இந்த விதை, நல்ல கொழுப்பு சத்து உள்ளது. புரோட்டீன், நார் சத்து, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் காப்பர் என பல சிறப்பு அம்சங்கள் கொண்டது இந்த விதை. இந்த விதையை சுற்றி கனமாக தோள் இருக்கும்.
இதை உடைத்து எடுத்தால் உள்ளே சிறிய விதை இருக்கும். அதனை நன்கு கழுவி காய வைத்து வருத்து சாப்பிடலாம்.
சிலர் இதனை சுண்டல் போல் வேகவைத்து தாளித்தும் சாப்பிடுவார்கள்.