தேவையானப்பொருட்கள்:
பாசிப்பருப்பு – 200 கிராம்,
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.