oth

இவை ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.

இஞ்சியில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி நமக்கெல்லாம் ஏற்கனவே தெரியும். இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் இது குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும் தன்மை கொண்டது. மேலும் இது கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. இன்னும் ஏராளமான நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதே போல கேரட். வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம்இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

இஞ்சி கேரட் ஜூஸ் தயாரிப்பு முறை :

எத்தனை கிளாஸ் வேண்டுமோ அதற்கேற்ப கேரட் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு கிளாஸ் இஞ்சி கேரட் ஜூஸ் செய்யும் முறை விளக்கப்பட்டிருக்கிறது.

ஒரு கேரட் எடுத்து நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிது சிறுதாக நறுக்கி அரைத்து பேஸ்டாக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு இன்ச் அளவுள்ள இஞ்சியை சேர்த்து அரைக்க வேண்டும்.

அதனை அப்படியே கிளாஸில் ஊற்றலாம். அல்லது வடிகட்டியும் ஊற்றலாம்.இஞ்சியை அப்படியே அரைப்பதற்கு பதிலாக இஞ்சிச் சாறு எடுத்தும் சேர்க்கலாம். உடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூளைச் சேர்த்து பருகலாம். வெள்ளைச் சர்க்கரை, கூடுதலான தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

கண்கள் :

கேரட்டில் இயற்கையாகவே பீட்டா கரோட்டீன் நிறைந்து காணப்படும். அவை தான் காய்கறி மற்றும் பழங்களுக்கு நிறத்தை கொடுக்கக்கூடியது. நூறு கிராம் கேரட்டில் 8285 மைக்ரோ கிராம் பீட்டா கரோட்டீன் வரை இருக்கிறது.

இவை நம் கண்களுக்கு மிகவும் நல்லது. உடன் இஞ்சியும் சேர்ந்திருப்பதால் அதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நச்சுக்களை வெளியேற்ற உதவிடும்.

இருமலுக்கு :

சாதரண காய்ச்சல் மற்றும் இருமலைப் போக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் இஞ்சி மற்றும் மிளகுத்தூள் ஆரம்ப காலத்தில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வீட்டு மருத்துவத்திலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவிடமிருந்து நம்மை பாதுகாப்பதால் நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

புற்றுநோய் :

உலகையே ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் ஓர் கொடிய நோய் இது. ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் சிகிச்சைகளை மேற்கொண்டு காப்பாற்றி விடலாம் என்றாலும் அதனால் ஏற்படுகிற பின் விளைவுகள் தான் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நம் உடலில் உள்ள செல்களை சுறுசுறுப்பாக இயக்கவும் புற்றுநோய் தாக்காமல் நம்மை காக்கவும் இந்த சாறு உதவுகிறது. இதற்கு கேரட்டில் இருக்கக்கூடிய Falcarinol என்கிற காம்பவுண்ட் உதவுகிறது.

ஆர்த்ரைட்டீஸ் :

ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை தாக்காமலிருக்க இந்த இஞ்சி கேரட் சாறு பெரிதும் உதவிடும். இஞ்சியில் இருக்கக்கூடிய சத்துக்கள் இயற்கையாகவே மூட்டு வலியை குறைக்கும் ஆற்றல் உள்ளது. இதிலிருக்கும் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி காம்பவுண்டான ஜிஞ்சரோல் ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை வராமல் தடுக்க உதவிடுகிறது.

வயதான தோற்றம் :

கேரட்டில் இருக்கக்கூடிய பீட்டாகரோட்டீன் நம் உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கக்கூடியது.இதனால் ப்ரீ மெச்சூர் மற்றும் ஏஜிங் சருமங்களை தடுத்திடலாம். வேறு உடல் ரீதியிலான பிரச்சனைகள் ஏதுமில்லை, மாதக்கணக்கில் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதவர்கள் தைரியமாக இந்த சாற்றினை தினமும் குடிக்கலாம்.

டிஎன்ஏ :

இந்த சாறில் சேர்க்கப்பட்டிருக்கும் இஞ்சியில் பொட்டண்ட் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைய இருக்கிறது. இவை டிஎன்ஏ வளர்ச்சிக்கு உதவிடுகிறது. அதோடு அதில் ஏதேனும் சிக்கல் வராமலும் தடுக்கிறது.

சருமம் :

இந்தச் சாறு உங்களுடைய சரும அழகிற்கும் மிகவும் நல்லது. கேரட்டில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டீன் தான் அதனுடைய நிறத்திற்கு காரணம். இவை நம் உடலிலுக்குள் செல்லும் போது விட்டமின் ஏவுடன் இணைந்து சருமத்திற்கு நிறத்தை ஊட்டுகிறது.

ஆரோக்கியமான சருமத்திற்கு விட்டமின் ஏ மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதயம் :

இந்தச் சாறு உங்களுடைய இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. இதில் ஏரளாமன மினரல்கள் இருக்கின்றன. இவை தொடர்ந்து குடித்து வந்தால் நம் உடலில் வேதியல் மாற்றங்களை செய்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுத்திடும்.

ஃபோலிக் அமிலம் :

கர்பிணிகளுக்கு இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஏனென்றால் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இது முக்கியப்பங்காற்றுகிறது.

கர்ப்பிணிகள் இந்தச் சாறை குடித்தால் அவர்களுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் கிடைத்திடும். மருத்துவ ஆலோசனையுடன் தினமும் தொடரலாம்.

வயிற்றுப் பிரச்சனைகள் :

வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீக்குவதில் இஞ்சி முக்கியப்பங்காற்றுகிறது. அதோடு வயிற்றில் சேரும் வாயுக்களையும் இவை நீக்கிடும். வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற கோளாறுகளை உடனே தீர்க்க இந்த ஜூஸ் குடிக்கலாம்.

விட்டமின் :

கேரட்டில் விட்டமின் பி காம்ப்லெக்ஸான விட்டமின் பி6,தியாமின்,பேண்டோதெனிக் ஆமிலம் உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை தொடர்ந்து குடிப்பதால் உங்கள் உடலில் விட்டமின் குறைபாடு வராமல் தடுத்திடும்.

மைக்ரேன் :

இந்தச் சாறு மைக்ரேன் வலிக்கு தீர்வாக இருக்கும். தினமும் குடித்து வந்தால் அந்த வலி ஏற்படாமல் தடுத்திட முடியும்.

மினரல்ஸ் :

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு எல்லாவிதமான சத்துக்களும் தேவை. இந்த சாறில் இருக்கக்கூடிய இஞ்சி மற்றும் கேரட்டில் ஏராளமான மினரல்ஸ் இருக்கிறது. பொட்டாசியம்,மெக்னீசியம்,கால்சியம்,காப்பர்,பாஸ்பரஸ் ஆகியவை நம் உடலுக்கு அவசியமான இன்று. இதனை தொடர்ந்து எடுத்து வர, நம் உடலுக்குத் தேவையான மினரல்ஸ் கிடைத்திடும்.

ஆஸ்துமா :

ஆஸ்துமாவிற்கான வீட்டு மருத்துவத்தில் இஞ்சி இடம்பெற்றிருக்கும். கேரட் மற்றும் இஞ்சி, பெப்பர் ,தேன் ஆகியவை கலந்திருக்கும் இந்த சாற்றினை தினமும் குடித்து வந்தால் ஆஸ்துமா வராமல் தடுக்கலாம்.

ஸ்பர்ம் :

உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன் உடலுறவு சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் இருக்கக்கூடிய தாதுக்கள் இதற்கு உதவுகின்றன.

இவை ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.

Related posts

இன்றைய இளம் ஆண்கள் அதிகமாய் படுக்கையில் தோல்வியுறுவது ஏன்???

nathan

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும் போது பெண்கள் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

nathan

முருங்கை விதை விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யுமா?

nathan

ஒரு முறை உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? இது சாத்தியமா?

nathan

ஆண்களுக்கு விந்தணு சக்தியைக் கொடுப்பதில் செலினியம் முக்கியம் பங்கு வகிக்கிறது.

nathan

ஆண்களே! தெரிந்து கொள்ளுங்கள். மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது.!

nathan

தெரிஞ்சிக்கங்க…கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் இதை செய்யவே கூடாதாம்

nathan

அதிகாலையில் தாம்பத்தியம் கொண்டால் விரைவில் கருத்தரிக்கலாம்

nathan

ஆண்களின் மன அழுத்தம் விந்தணு உற்பத்தியை பாதிக்குமா?

nathan