24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
1519825466 f
எடை குறையஆரோக்கியம்

உடல் எடையை எளிதாக குறைக்க கூடிய பொடி!….

உடல் எடையை எளிதாக குறைக்க கூடிய அந்த பொடி வேறு எதுவும் இல்லை. சுக்கு பொடி தான். சுக்கு பொடியில் உள்ள சில முக்கிய மூல பொருட்கள் தான் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதை சரியான அளவில் இந்த பதிவில் கூறும் தயாரிப்பு முறையின் படி சாப்பிட்டு வந்தால் 2 வாரத்தில் உங்கள் தொப்பை, உடல் எடை, கொழுப்பு ஆகிய அனைத்திற்கும் தீர்வை கொடுத்து விடலாம்.

செரிமான கோளாறு

உடல் எடை கூடும் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியை தருவதே இந்த செரிமான கோளாறுகள் தான். இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்.

அதற்கு இந்த சுக்கு பொடியை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே செரிமான கோளாறுகள் நீங்கி விடும்.1519825466 f

வாய்வு தொல்லைக்கு

எதை சாப்பிட்டாலும் கை கால்களில் வாய்வு போன்று பிடித்து கொள்கிறதா..? அப்போ உங்களுக்கு தான் இந்தகுறிப்பு..

தேவையான பொருட்கள்…

ஓமம் பொடி அரை டீஸ்பூன்

சுக்கு பொடி அரை ஸ்பூன்

எலுமிச்சை அரை ஸ்பூன்

பெருங்காயம் ஒரு சிட்டிகை

உப்பு ஒரு சிட்டிகை

தயாரிப்பு முறை…

முதலில் 1 கிளாஸ் நீரை வெது வெதுப்பான சூடு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும். அடுத்து இதனுடன் ஓமம் பொடி, சுக்கு பொடி சேர்த்து கொண்டு கலக்கவும்.

இறுதியாக எலுமிச்சை சாறு, பெருங்காயம் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் வாய்வு தொல்லை பறந்து விடும்.

சிறுநீரக பாதை தொற்றுகளுக்கு

சிறுநீர் போகும் இடத்தின் வெளியிலோ அல்லது உள்ளேயோ ஏதாவது தொற்றுகளினால் பாதிப்பு இருந்தால் சுக்கு பொடியை நீரில் கலந்து குடிப்பதால் சரியாகும். மேலும், சிறுநீர் வராமல் இருக்கும் பிரச்சினைக்கும் இது தீர்வை தரும்.

உடல் எடையை குறைக்க

வாய்வு தொல்லைக்கு தீர்வை எப்படி இந்த சுக்கு தந்ததோ அதே போன்று உடல் எடை குறைப்பிற்கும் தருகின்றது. இதற்கு தேவையான பொருட்கள்…

சுக்கு பொடி அரை ஸ்பூன்

தேன் அரை ஸ்பூன்

செய்முறை :-

சுக்கை பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இதனை வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும். பின் சற்று சுவையிற்காகவும், கொழுப்பை குறைக்கவும் தேனை சேர்த்து கொண்டு குடிக்கலாம். இதனை காலை வேளையில் சாப்பாட்டிற்கு முன் குடித்து வந்தால் பலன் அதிகம்.

முகப்பருக்களை ஒழிக்க

முகத்தின் அழகை கெடுக்கும் முகப்பருக்களை ஒழிக்க சுக்கு பொடி ஒன்றே போதும். 1 ஸ்பூன் சுக்கு பொடியை 1 ஸ்பூன் பால் பவ்டருடன் கலந்து முகத்தில் பூசி கொள்ளவும்.

20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து போகும்.

அழுக்குகளை வெளியேற்ற

உடலின் உள்ளே உள்ள அழுக்குகளை வெளியேற்ற எப்படி சுக்கு பொடி பயன்படுகிறதோ, அதே போன்று உடலின் வெளியில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய சுக்கு பொடி பயன்படுகிறது. இதற்கு தேவையானவை…

பேக்கிங் சோடா 1 ஸ்பூன்

சுக்கு பொடி 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

குளிப்பதற்கு முன்னர் குளிக்கும் நீரில் சுக்கு பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து கொள்ளவும். இந்த நீரில் குளித்தால் உடலின் மேற்பகுதியில் உள்ள கழிவுகள் எளிதாக நீங்கி விடும்.

நெஞ்சு வலிக்கு

உங்களுக்கு ஏற்படுகின்ற நெஞ்சு வலியை கூட இந்த சுக்கு பொடியை வைத்து குணப்படுத்தி விடலாம். இதற்கு தேவையானவை…

இளநீர் நீர் அரை கிளாஸ்

சுக்கு பொடி அரை ஸ்பூன்

சர்க்கரை அரை ஸ்பூன்

தயாரிப்பு முறை :-

முதலில் சுக்கு பொடியை இளநீரில் நீரில் நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சர்க்கரையை இறுதியாக சேர்த்து குடிக்கவும். இந்த வைத்தியம் உங்களின் நெஞ்சு வலியை விரட்டி அடித்து விடும்.

காரணம் என்ன..?

இவ்வளவு மகத்துவங்கள் இந்த சுக்கு பொடியில் உள்ளதற்கு முக்கிய காரணம் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பீட்டா கெரோட்டின், ஜின்ஜெரோல், குர்குமின் போன்ற மூல பொருட்கள் தான் காரணம். அதனால் தான் பல ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் இதனை பயன்படுத்தி வந்தனர்

Related posts

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல்

nathan

இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்க இத செய்யுங்கள்!….

sangika

நீங்கள் செய்யும் இந்த 7 தவறுகள் தான் உங்கள் எடையை குறையவிடாமல் தடுக்கிறது எனத் தெரியுமா?

nathan

ஜாலியா எப்படி கொழுப்பை குறைக்கலாம்?

nathan

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது……

sangika

எடை குறைக்கும் இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ்

nathan

மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்க….

sangika

உடல் பருமனை அதிரடியாக குறைக்கும் “பேலியோ” டயட் முறைக்கு உதவும் சமூக வலைதளம்!

nathan

சுவிஸ் பால் பயிற்சி வயிறு, இடுப்பு சதையை குறைக்கும்

nathan