தேவையானப் பொருட்கள்:
மைதா – ஒரு கப்,
சர்க்கரை – அரை கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
பால் – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:
மைதா, உப்பு இரண்டையும் கலந்து சலிக்கவும். சர்க்கரையை பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சலித்த மாவு சேர்த்துக் கலந்து, பால் விட்டு பிசையவும். இதை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பிசைந்த மாவை, சிறுசிறு உருண்டைகளாக செய்து சப்பாத்தி போல திரட்டி, விரும்பிய வடிவில் வெட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.