எந்த ஒரு அழகு குறிப்பாக இருந்தாலும் அது நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்து தயாரித்தால் தான் அதன் பலன் அதிகமாக இருக்கும். மேலும், எந்தவித பக்க விளைவுகளும் இதனால் ஏற்படாது. எளிய பொருட்களை வைத்தே முகப்பருக்கள், முக சொர சொரப்புகள், கருமை ஆகியவற்றை போக்குவதே சிறந்த ஒன்று.
இந்த வேலையை விரைவாக செய்கிறது நமது வீட்டில் இருக்க உணவு பொருட்கள். அதுவும் நமது சமையல் அறையில் உள்ள பொருட்கள். இது காய்கறியாகவோ, பழமாகவோ, மசாலா பொருளாகவோ கூட இருக்கலாம். இனி இந்த பொருட்களை வைத்து எப்படி பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
தேங்காயும் காபியும்
உங்களின் முகம் பளீச்சென்று இருக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் :-
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
காபி தூள் 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் காபி தூளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இந்த குறிப்பு முகத்தின் வறட்சியை குறைத்து கருமையை நீக்குகிறது. மேலும், பளீச்சென்ற முகத்தையும் தருகிறது.
புதுவித குறிப்பு
இந்த குறிப்பில் பயன்படுத்த போகின்ற உணவு பொருட்கள் அனைத்துமே முகத்தை பொலிவாக மாற்ற கூடியவை.
தேவையானவை…
வாழைப்பழம் பாதி
சர்க்கரை 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
செய்முறை :-
உங்களின் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முதலில் வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சர்க்கரை மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
கடல் உப்பு
முகத்தை உப்பை கொண்டு கூட அழகாக மாற்ற முடியும்.
இதற்கு தேவையானவை…
உப்பு 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் சிறிது
செய்முறை :-
உப்புடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழிவி விடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகம் பளபளவென மாறும்.
யோகர்ட் முறை
முகத்தை சுத்தம் செய்ய கூடிய பொறுப்பு இந்த குறிப்பிற்கு உள்ளது.
தேவையானவை…
யோகர்ட் 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
சர்க்கரை 3 ஸ்பூன்
செய்முறை :-
சர்க்கரையுடன் யோகர்ட் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யலாம். இது அருமையான பலனை உங்களுக்கு தரும்.