29.2 C
Chennai
Tuesday, Feb 18, 2025
kachchAN
அழகு குறிப்புகள்ஆரோக்கியம்

இளமையைப் பராமரிக்க இதை செய்யுங்கள்!….

ஆயுளை அதிகரிக்கும் வேர்க்கடலை: நிலக்கடலை (வேர்க்கடலை) கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.

நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம். மறந்துபோன நம் பாரம்பர்ய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், நிலக்கடலை குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் உள்ளது.

kachchAN

கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்துகிறோம். நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ்-ம் கூட. இதன் மகிமை தெரிந்தால்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பயன்படுத்தும் உணவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஆனால், அதிகமாக உற்பத்தியாகும் இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம்.

பித்தப்பை கல் கரைக்கும்

நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

சத்துகள்

நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதில் முக்கியமான சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.மேலும் வேர்க்கடலையை சாப்பிடுபவர்கள் நீண்ட நாள் வாழலாம். மரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தசைகளை வலிமையாக்கும்

நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.

கொழுப்பைக் குறைக்கும்

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல். கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

மன அழுத்தம் போக்கும்

நிலக்கடலையில் டிரைப்டோபீன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.

நினைவாற்றல் அதிகரிக்கும்

இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

இதயம் காக்கும்

நிலக்கடலையைறீத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), , ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள்கள் நிலக்கடலையைச் சாப்பிட்டு வருவது இதய நோய்களைத் தடுக்க உதவும்.

புரோட்டின் நிறைந்தது

கடலையில் அதிகளவு புரோட்டின் உள்ளது. அதேபோல இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-டி நிறைந்துள்ளது. அதாவது, இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலை சாப்பிடலாம்.

இளமை பராமரிக்கும்

இதிலுள்ள சத்துகள் முதுமையைத் தள்ளிப்போடுவதுடன், இளமையைப் பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.வேர்க்கடலை

எலும்புக்கு வலிமை தரும்

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

Related posts

ஒரு வாரத்தில் வெள்ளையாக வேண்டுமா? இந்த மாஸ்க் மட்டும் போதும்

nathan

வெறும் வயிற்றில் பச்சை முட்டை சாப்பிடலாமா?

nathan

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள டிப்ஸ!…

nathan

மார்பகங்களின் அளவை பெரிதாக்க இயற்கை வைத்தியங்கள்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு புதினாக்கீரை!…

sangika

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

அரண்மனை போல மாறிய பிக் பாஸ் வீடு !ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு!

nathan

உடல் எடையை குறைக்க இதை குடிங்க!….

sangika

நயன்தாராவிற்கு நடிகை நமிதாவிற்கும் இடையே சண்டையா..

nathan