29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
thulasi2
ஆரோக்கியம்மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருந்துகள்!…

மருத்துவம் என்பது மிகவும் அற்புதமான ஒரு துறையாகும். ஏனென்றால், ஒரு உயிருக்கு மறு பிறவி கொடுப்பதற்கு சமமானது இந்த மருத்துவம். இது, இன்று நேற்று வந்ததில்லை பல லட்சம் வருடத்திற்கு முன்பில் இருந்தே இது பின்பற்றப்படுகின்றது. இந்த துறை ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்றாற்போல பல மாற்றங்களை அடைய கூடியது. மனிதர்களுக்கு ஒரு விதமான மருத்துவமும், விலங்குகளுக்கு ஒரு விதமான மருத்துவமும், பறவைகளுக்கு வேறு வித மருத்துவமும் பின்பற்ற படுகிறது.

ஆனால், நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்படுவது “ஆயுர்வேத மருத்துவம்” தான். இது பல நன்மைகளை உடலுக்கு தருவதாக பல அறிஞர்களும் கூறுகின்றனர். இந்த பதிவில் சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருந்துகளை பற்றி பார்ப்போம்.

thulasi2

ஆயுர்வேதமும் நீரிழிவும்…

ஆயுர்வேத முறை என்பது நம் முன்னோர்கள் வழியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவ முறையாக கருதபடுக்கின்றது. அந்த காலத்தில் எல்லா வித நோய் பிணிகளையும் இதை வைத்துதான் குணமடைய செய்தனர். அந்த வகையில் இது நீரிழிவு நோய்க்கும் உதவுகிறது. தற்போதைய உலகின் கொடிய நோயாக கருதப்படுவதைகூட, சரி செய்யும் ஆற்றல் இந்த மருத்துவ முறைக்கு உள்ளதாம்.

துளசியும், வேப்பிலையும்…

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை இந்த இலைகளுக்கு உள்ளது. இவற்றின் சாற்றை சேர்த்து குடித்தால் இவை அருமையான மருந்தாக மாறும். 10 வேப்பிலை கொழுந்து இலைகள் மற்றும் 10 துளசி இலைகள் எடுத்து கொண்டு நன்கு அரைத்து அவற்றின் சாற்றை மட்டும் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை குறைக்குமாம்.

பாகற்காய் சாறு…

சர்க்கரை நோயின் எதிரியாக கருதப்படுவது இந்த பாகற்காய்தான். ஏனெனில் இவை சர்க்கரை அளவை மிகவும் கட்டுக்கோப்பாக வைக்க உதவும். அத்துடன் ரத்தத்தை சுத்திகரித்து சுத்தமான ரத்தத்தை உடலுக்கு செலுத்தும். பாகற்காய் சாற்றை தினமும் 30 ml குடித்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.

நாவல் விதைகள், இலைகள் …

பொதுவாக இந்த நாவல் பழங்கள் நல்ல மருத்துவ குணம் கொண்டவை. அத்துடன் இவற்றின் இலைகள் மற்றும் விதைகள் கூட அற்புத தன்மை கொண்டதாம். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதன் இலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இவற்றின் விதைகளை பொடி செய்து தினமும் 1 டீஸ்பூன் நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை தீர்க்குமாம்.

திரிபலா…

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையே இந்த திரிபலா. இது மிகவும் முதன்மையான மருந்தாக ஆயுர்வேதத்தில் கருத்துப்படுகிறது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உடலை சீராக வைக்கிறது. தினமும் இவற்றை வெது வெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகுமாம்.

ஆலமர பட்டை…

ஆலமரத்தின் பழமை மட்டுமே நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவற்றின் பட்டையில் இருக்கும் மகத்துவம் பற்றி நமக்கு தெரியாமலே போய்விட்டது. ஆலமர பட்டையை 20 gm எடுத்து கொண்டு 4 கிளாஸ் நீரில் கொதிக்க விடவும். பின் 1 கிளாஸ் அளவுக்கு வந்தவுடன் வடிகட்டி ஆற வைத்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

இலவங்க பொடி…

வீட்டு மருத்துவமாகவும் ஆயுர்வேத மருத்துவமாகவும் கருதப்படும் இந்த இலவங்கம் மிகவும் எளிமையான ஒன்றாகும். இதன் மூலம் சர்க்கரை நோயை சுலபமாக குணப்படுத்த முடியுமாம். தினமும் 3 டீஸ்பூன் இலவங்க பொடியை 1 லிட்டர் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவும்.

நெல்லிக்காய் சாறு…

அதிக மருத்துவ குணம் கொண்ட கனிகளில் ஒன்று இந்த நெல்லிக்கனி. மிகவும் பிரசித்தி பெற்ற இது, உடலின் செயல்பாட்டை சீராக வைக்க அதிகம் உதவுகிறது. தினமும் 20 ml நெல்லி சாற்றை குடித்து வந்தால் நீரிழிவு நோயிற்கு சிறந்த மருந்தாகும். மேலும், இது ரத்தத்தை சுத்தம் செய்யவும் பயன்படும்.

வெந்தய விதைகள்…

வெந்தயம் ஒரு அருமையான மருந்தாகும். பல ஆயுர்வேத மருத்துவத்தில் வெந்தயத்தின் பயன்பாடு முதன்மையானதாக கருதப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் நாள் இரவு முழுவதும் மிதமான நீரில் ஊற வைத்த வெந்தயத்தை, அடுத்த நாள் எடுத்து அரைத்து வடிகட்டி குடித்தால் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

மூன்றும் சேர்ந்தால்…

பொதுவாக ஒரு சில மூலிகைகளின் கலவையே சிறந்த மருந்தாக இருக்க கூடும். அந்த வகையில் கற்றாழை, பிரியாணி இலை, மஞ்சள் இவை மூன்றும் அருமையான மருந்தாக விளங்குகிறது. இவை மஞ்சள் மற்றும் பிரியாணி இலை பொடியை 1/2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அவற்றுடன் 1 ஸ்பூன் கற்றாழை சேர்த்து

கலந்து கொள்ளவும். பின் இவற்றை மதிய மற்றும் இரவு உணவு உண்ணுவதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலனை அடையலாம்.

முக்கிய குறிப்பு…

எந்த ஒரு மருந்தையும் எடுத்து கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது மிக சிறந்த முறையாகும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தங்களின் சர்க்கரையின் அளவை பரிசோதித்து விட்ட பிறகே இவற்றை உண்ணலாமா வேண்டாமா என மருத்துவர்கள் கூறுவார்கள். எனவே, மருத்துவரின் ஆலோசனை மிக இன்றியமையாததாகும்.

Related posts

வாயு பிரச்சனையை குறைக்க சூப்பர் டிப்ஸ் !!

nathan

பரவும் பன்றிக்காய்ச்சல்… தொடரும் பதற்றம்… தீர்வு என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா கருவில் இருப்பது என்ன குழந்தை என்று தெரிய அந்த காலத்தில் செய்த வினோதமான சோதனைகள் ?

nathan

தெரிஞ்சிக்கங்க…கைவைத்தியத்தில் சிறந்த பலன் தரும் மிளகு வைத்தியம், எந்த நோய்க்கு எப்படி எடுக்கணும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் சுழற்சி முன்கூட்டியே நின்றுவிடுவதால் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுகிறதா?

nathan

உங்க இதயத்துல எப்பவுமே கொழுப்பு சேராம இருக்கணும்னா இந்த 7 உணவுகளை சாப்பிடுங்க போதும்! சூப்பரா பலன் தரும்!!

nathan

உடல் எடை அதிகரித்து குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மாத விடாய் ஏற்படுகின்றது. ஆலோசனை வழங்கவும்.

nathan

டென்டல் கிளிப்… டென் கைட்லைன்ஸ்!

nathan