நமது முகம் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும் ஆசைதான். என்றாலும் இதை நிறைவேற்ற தவறான வழிகளை தேர்ந்தெடுக்க கூடாது. குறிப்பாக வேதி பொருட்கள் நிறைந்த கிரீம்கள், பவ்டர்கள் தான் உங்களின் முகத்தை முழுவதுமாக சேதம் செய்கின்றன.
இதனால் முக அழகு பாழகியும் விடுகிறது. முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் அவை பொலிவான தோற்றத்தை தர இயலாது. இதை சரி செய்ய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளது. வாங்க, அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
பப்பாளியும் சர்க்கரையும்
முகத்தில் உள்ள இறந்த செல்களை எளிதாக அகற்ற இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். அதற்கு 2 துண்டு பப்பாளியை எடுத்து கொண்டு நன்றாக மசித்து 1 ஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் இறந்த செல்களை உடனடியாக அகற்றி விடலாம்.
இத ட்ரை பண்ணுங்க..!
உங்களுக்கு உடனடி தீர்வை தருவதற்கு இந்த குறிப்பு நன்கு உதவும். இதற்கு தேவையானவை… தேன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் காபி பவ்டேர் 1 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் காபி பொடியுடன் தேனை நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இறந்த செல்கள் விரைவிலே நீக்கி விடும்.
ஆலிவ் எண்ணெய் முறை..
முகம் மற்றும் உடலின் நலத்தை பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பெரிதும் உதவும். 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து கொண்டு முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் கொடுக்கவும். பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலசவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஸ்ட்ராவ்பெர்ரி வைத்தியம்
பழங்களை கொண்டும் நம்மால் எளிதாக இறந்த செல்களை நீக்க முடியும்.
இதற்கு தேவையானவை…
ஸ்ட்ராவ்பெர்ரி 2
தேன் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் ஸ்ட்ராவ்பெரியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். ஸ்ட்ராவ்பெரியில் உள்ள வைட்டமின் சி, இறந்த செல்களை அகற்றி பொலிவை தரவல்லது.
முட்டையும், எண்ணெய்யும்
1 ஸ்பூன் சூரிய காந்தி எண்ணெய்யுடன்1 முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடம் கழித்து முகத்தை அலசவும். இதில் முட்டையின் வெள்ளை கருவிற்கு இறந்த செல்களை அகற்றும் தன்மை உள்ளதாம்.
ஆப்பிள் சிடர் வினிகர்
முகத்தின் இறந்த செல்களை அகற்ற இந்த எளிய முறை நன்றாக பயன்படும். 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை பஞ்சால் எடுத்து கொண்டு ஒத்தடம் போன்று கொடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி விடும்.