இன்றைய பெண்கள், செயற்கை ரசாயனங்கள் கொண்டும், உடலுக்கு தீங்கான வேதியியல் பொருட்களை சேர்த்தும் தயாரிக்கப்படும் கிரீம்களை முகத்தில் பூசும் போது அப்போது வேண்டுமானால் அது அழகை கூட்டலாம். ஆனால் நாளடைவில் பெண்களின் முகம் பொலிவிழந்து விடும். வறண்டு, போகும்.
மேலும் தேவையற்ற முடிகளும் ஆங்காங்கே முளைத்து முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் சீர் குலைக்கும்.
நம்ம ஊர் பெண்களுக்கு நமது பாரம்பரிய அழகு சாதனங்களில் எப்போதுமே மஞ்சளுக்கு தனி இடம் உண்டு.
இயற்கையான முறையில் விளைவித்த நல்ல மஞ்சளை எடுத்து, அதை நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு, இளவயது பெண்கள் முதல் முதிய வயது பெண்கள் வரை தினமும் குளிக்கும்போது முகத்தில் பூசி குளித்து வந்தால் அவர்களின் முகத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காது, கருமை ஆகாது, சோர்வு ஏற்படாது, புது பொலிவு உண்டாகும், முகம் பளபளக்கும்.
இதனால் இளம்பெண்கள் அழகு தேவதைகளாக வலம் வரலாம்.