இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் விபரீத நோய்கள் முறையற்ற உணவுகளை உண்பதாலும், போதுமான உடல் உழைப்பின்மையாலும் நமது உடலில் கொழுப்பு அதிகளவில் சேர்கின்றது. இந்த கொழுப்பு, நமது இரத்தக் குழாய் களில் சேர்வதால் அந்த இரத்த குழாய்கள் தடிமன் அடைகின்றன.
இதுபோன்ற இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதால் பின்வரும் நோய்களின் தாக்குதலுக்கு நாம் எளிதில் ஆளாகிவிடுகிறோம் என்பது தான் மறுக்கமுடியாத உண்மை.
இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால்
> இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
> இதய தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது.
> இதனால் இதய தசைகள் பாதிக்கின்றன.
> மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைகிறது.
> இதனால் சோர்வும், நரம்புத்தளர்ச்சியும் உண்டாகிறது.
உடம்பில் ஏற்படும் நுண்கிருமிகளின் தொற்று, விக்கடிகள் போன்றவற்றால் புரோ ஸ்டோகிளாண்டின் என்னும் பொருள் அதிகரித்து உணர்வு நரம்புகளை பாதிக்கின்றன.
> மேலும் உடலில் சேர்ந்த நுண்கிருமிகள் சிறுநீர்பாதை மற்றும் மலப்பாதையில் தங்கி மலம் கழிக்கும் போது வலியையும், சிறுநீர் செல்லும் போது எரிச்சலையும் உண்டாக்கின்றன.
இரத்தத்தில் அதிகரித்த யுரிக் அமிலம் எலும்பு இணைப்புகளை பாதிப்பதுடன் சிறுநீர்ப் பாதையில் யுரிக் அமிலக் கற்களையும் உற்பத்தி செய்கின்றன.
இவ்வாறு மேற்குறிப்பிடப்பட்ட பலவிதமான சத்துக்கள் இரத்தத்தில் குறைவதால் நமது அன்றாட உடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், பலவிதமான நோய்களும் உண்டாகின்றன. இந்த நோய்களில் இருந்து முற்றிலுமாக விடுபட அல்லது நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க அருமையான மா மருந்துதான் வெங்காயம். இந்த வெங்காயம் சேர்த்த உணவு வகைகள் உண்டு வந்தாலே போதுமானது.