பெண்களில் சிலருக்கு இயற்கையாகவே அவர்களது உடலில் மெல்லியதாக உரோமம் இருக்கும். இந்த உரோமத்தால் அவர்களின் அழகு பாழாவதாக சிலர் நினைத்து அதனை நீக்குவதற்கு வலி தெரியாமல் இருப்பார்கள்.
அந்த வகையில் உரோமத்தை நீக்கும் முறைகள் பற்றி காண்போம்.
வழக்கமான முறை:
பொதுவாக ஆண்கள் ஷேவிங் செய்யவேண்டும் என்று நினைத்தால் உடனடியாக கடைக்கு சென்று அல்லது சுய ஷேவிங் செய்வார்கள்., அந்த வகையில் ஷேவிங் என்று நமது சருமத்தில் பிளேடானது பட்டது முதல் பெரும்பாலோனோருக்கு உரோமமானது வளர துவங்கிவிடும்.
இதன் காரணமாக பிளேடால் உரோமத்தை நீக்க கூடாது.
இரசாயன பொருட்கள்:
இரசாயன பொருட்களை உபயோகம் செய்வதன் மூலம் உரோமங்களின் நிறத்தை மாற்றி உரோமங்கள் இருந்தாலும் வெளியே தெரியாத அளவிற்கு மறைக்க செய்யலாம்.
எலக்ட்ரோலைசிஸ்:
பணம் மற்றும் நேரத்தை அதிகப்படுத்தும் எலக்ட்ரோலைசிஸ் என்ற முறையின் மூலம் உரோமத்தை நீக்கலாம். இந்த முறையில் நீக்கப்பட்ட உரோம பகுதியில் மீண்டும் உரோமம் மீண்டும் முளைக்காது. இந்த முறைக்கு பணம் மற்றும் நேரம் அதிகம்.
லேசர்
லேசர்களை பயன்படுத்துவதன் மூலம் உரோமத்தை நீக்கலாம். இந்த முறையில் பணம் மற்றும் நேரம் செலவழித்த பின்னரே உரோமத்தை நீக்க முடியும்.
மேற்கூறிய அனைத்து முறைகளும் கண்டிப்பாக முழுமையான தீர்வை தரும் என்று முழுமையாக கூற இயலாது. ஆனால் நேரம் மற்றும் பணம் விரயம் ஆகும் என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
இந்த பிரச்சனைகளுக்கு பெண்கள் சிறுவயதில் இருந்தே மஞ்சள்., குப்பை மேனி இலை தூளை உடலில் தேய்த்து குளித்து வந்தால் இது போன்ற பிரச்சனைகள் இருக்காது.
சில பெண்களுக்கு உரோமங்கள் இருப்பதும் அவர்களுக்கு அழகாக இருக்கும்., ஆகவே தேவையற்ற பக்க விளைவுகளை வரவழைக்கும் முறைகளை மேற்கொள்ளாமல் இயற்கையாக உரோமத்தை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள்., இல்லையெனில் இதுவும் ஒரு அழகுதான் என்று விட்டுவிடுங்கள்.