24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
stomach pain in women
அழகு குறிப்புகள்

பெண்கள் மாதவிடாய் வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்பிலிருந்து விடுபட தீர்வு!….

நாம் சாப்பிடும் உணவுகளால் உடலினுள் டாக்ஸின்கள் தேங்கிக் கொண்டிருக்கும். ஒருவரது உடலில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அதனால் நோய்த்தாக்குதலும் அதிகரிக்கும்.

நம் உடலினுள் டாக்ஸின்களானது கல்லீரல், சிறுநீரகங்கள் போன்றவற்றில் தான் அதிகம் சேரும்.

ஏனெனில் இவைகள் கழிவுப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் முக்கிய பணிகளைச் செய்கின்றன. இதை சுத்தம் செய்ய ஒரு சில பானங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.

அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பானங்களைத் தயாரிக்கலாம்.

stomach pain in women

மல்லி பானம் தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி ஒரு டீஸ்பூன் மல்லி விதைகளைப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

நீரானது ப்ரௌன் நிறத்தில் மாறியதும், அடுப்பை அணைத்து நீரை வடிகட்டி குளிர வைத்தால், பானம் தயார்.

குடிக்கும் முறை:

மல்லி நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிலோ அல்லது இரவு தூங்குவதற்கு முன்போ குடிக்க வேண்டும்.

ஆனால் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் மட்டும் தான் குடிக்க வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு சருமம் என்றால் மல்லி நீரை தினமும் குடியுங்கள். இதனால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

நன்மைகள்:

மல்லி நீர் உடலில் உள்ள டாக்ஸின்களை நீக்க உதவுவதோடு மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்திக் காட்டும்.

ஒருவரது உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால், அதுவே ஒருவரது அழகை பாழாக்கும்.

மல்லி நீரை தினமும் தவறாமல் குடித்தால், விரைவில் முக அழகு மேம்பட்டு இருப்பதைக் காணலாம்.

சோம்பு பானம் தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும். பின் அதில் 1-2 டீஸ்பூன் சோம்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன் பின் நீரை வடிகட்டினால், சோம்பு தண்ணீர் குடிப்பதற்கு தயாராகிவிட்டது.

குடிக்கும் முறை:

சோம்பு நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. அதேப் போல் ஒவ்வொரு வேளை உணவு உண்ட பின்னரும் சோம்பு நீரைக் குடித்தால், வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் அகலும்.

நன்மைகள்:

1

ஒருவர் சோம்பு நீரை அன்றாடம் குடித்து வந்தால், அது செரிமான பிரச்சனைகளை நீக்குவதோடு, துர்நாற்றமிக்க வாய்வு வெளியேறுவதைத் தடுக்கும்.

மேலும் சோம்பில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமின்றி, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், அதிலிருந்து விடுபடவும் உதவும்.

2

உங்கள் வாய் துர்நாற்றத்துடன் இருக்கிறதா? இவர்கள் தினமும் சோம்பை வாயில் போட்டு மெல்லுவதோடு, சோம்பு நீரைக் குடித்து வந்தால், அதில் உள்ள ஏராளமான மருத்துவ பண்புகள், வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.

3

மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்களால் அவஸ்தைப்படுவார்கள்.

இதிலிருந்து விடுபட சோம்பு நீர் உதவியாக இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பிரச்சனை இருக்கும். இந்த பானத்தைக் குடித்தால் மாதவிடாய் சுழற்சி பிரச்சனை சரியாகும்.

4

உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் தினமும் சோம்பு நீரைக் குடிப்பதன் மூலம், நீர் உடம்பாக இருந்தால் விரைவில் குறைந்துவிடும்.

அதுவே கொழுப்பு உடம்பாக இருந்தால், உடலின் மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக எரிக்கப்பட்டு, பசியும் கட்டுப்படுத்தப்படும்.

சீரக பானம் தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் ப்ரௌன் நிறத்தில் வந்ததும், அடுப்பை அணைத்து நீரை வடிகட்டி குளிர வைத்தால், சீரக பானம் தயார்.


இல்லாவிட்டால், நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை ஒரு டம்ளர் எடுத்து, அதில் சிறிது சீரகத்தைப் போட்டு 5 நிமிடம் மூடி வையுங்கள். பின் நீரை வடிகட்டினால், பானம் தயார்.

குடிக்கும் முறை:

சீரக பானத்தை வெதுவெதுப்பான நிலையில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால், சீரக நீரை க்ரீன் டீயுடன் சேர்த்தும் குடிக்கலாம்.

இன்னும் எளிய வழி வேண்டுமானால், குடிக்கும் நீருடன் சீரக நீரை சேர்த்து கலந்து, நாள் முழுவதும் குடிக்கலாம்.

நன்மைகள்:

1

சீரக தண்ணீர் செரிமான மேம்படுத்துவதோடு, செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு, குமட்டல் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

சீரகம் கணையத்தில் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும்.

2

இரவில் தூக்கம் வராமல் அவஸ்தைப்படுபவர்களா நீங்கள்? அப்படியெனில் சீரகத் தண்ணீர் அதற்கு நல்ல தீர்வை வழங்கும்.

சாதாரணமாக தூக்க பிரச்சனை இருப்பவர்கள், இரவில் சீரக நீரைக் குடிப்பதோடு, ஒரு வாழைப்பழத்தையும் சாப்பிட்டு வந்தால், இரவில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

3

சீரகம் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். மேலும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை சீரக தண்ணீர் மேம்படுத்தும்.

அதுவும் சீரக நீர் சிறுநீரகங்களின் வலிமையைப் பராமரிப்பதில் பெரிதுவும் உதவியாக இருக்கும்.

Related posts

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! நடிகர் வடிவேலுவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் தெரிஞ்சோ தெரியாமலோ கூட இந்த விஷயங்களை எல்லாம் செய்துவிடாதீர்கள்!

nathan

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஷியல்

nathan

உங்கள் முகத்தின் சருமம் எந்த வகை

nathan

வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

சூப்பரான கத்தரி வெந்தயக்கறி

nathan

வாய் புண்ணை சீக்கிரம் குணமாக்க எளிய வைத்தியம்!…

nathan

நடிகையை ரகசியமாக துரத்தி துரத்தி காதலித்து வந்த நடிகர் விஜய்..

nathan