27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
earpain
அழகு குறிப்புகள்

காதுவலிக்கு தீர்வு என்ன தெரியுமா?

அதிக சத்தம் என்பது கேட்போருக்கு தொந்தரவினைக் கொடுப்பதாகும். இன்றைய காலக் கட்டத்தில் அதிக சத்தத்திற்கு நாம் நம்மை பழக்கிக் கொண்டு விட்டோம்.

இந்தஅதிக சத்தம் பாட்டு, டி.வி., நாய் குரைத்தல் போன்றவை ஒருவரை அதிகம் பாதித்தாலும் இத்துடனேயே நாம் வாழ்கின்றோம்.

தொழிற்சாலைகள் – இங்கு மிஷின்களின் சத்தம் மிக அதிகம். இங்குள்ளோர் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டிருப்பர்.

earpain

நெருக்கமான வீடுகள், இதனால் இவர் களிடையே எங்கும் சண்டைகள்.

கல்யாணம் என்ற பெயரில் தெருவே அதிரும் வெடி சத்தங்கள், கச்சேரிகள்.

வாகனங்களின் காதை பிய்க்கும் ஒலிகள்.

வீடு கட்டும் இடங்கள்.
மிக்சி, கிரைண்டர் என அனைத்துமே உடல்நலத்தை பாதிக்கும் அதிக சத்தங்கள் தான். அதிக சத்தம் காதுகேளாமை என்ற பாதிப்பினை ஏற்படுத்தும். * மூளையின் ரத்தக் குழாய்களை தளர்த்தி தலைவலியை ஏற்படுத்துகின்றது.

இருதய துடிப்பினை அதிகப்படுத்துகின்றது.
ரத்த குழாய்களை இறுக்குகின்றது.
ரத்த அழுத்தம் கூடுகின்றது.
நெஞ்சுவலி ஏற்படுகின்றது.
படபடப்பின் காரணமாக ஜீரண சக்தி பாதிக்கப் படுகிறது.
கண்களுக்கு அழுத்தம் கூடுகின்றது.
இரவு கண்பார்வை மங்குகின்றது.
நிறங்களை அறியும் தன்மை குறைகின்றது.
தசைகளும், நரம்புகளும் தளர்வடைகின்றன.
அதிக சோர்வு உண்டாகும்.
தூக்கமின்மை ஏற்படும்.
மனதளர்ச்சி உண்டாகும்.
கல்லீரல் கெடுவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து காதுவலி இருந்தால் காதில் கிருமி தாக்குதல் இருக்கின்றது என்று பொருள்.

காதுவலி
காதுஅடைப்பு
காது சரியாக கேளாமை
காதில் இரைச்சல்
வயிற்றுப் பிரட்டல்
வாந்தி

தலை சுற்றல் இவையெல்லாம் காதில் கிருமி தாக்குதலின் அறிகுறிகள். இப்படி காதில் கிருமி தாக்குதல் இருக்கும் பொழுது ஓய்வு அவசியம் தேவை.

இருமுதல், தும்முதல், குனிதல் போன்றவை இருக்கக்கூடாது. மருத்துவர் ஆலோசனையும், மருந்தும் அவசியம் தேவை. உயர் ரத்த அழுத்தமுடையோர் மூக்கடைப்பு மருந்துகளை ஆலோசனைப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

நல்ல உடற்பயிற்சி

புகை பிடிக்காமை

காபி, சோடியம் (உப்பு) இவற்றினை வெகுவாய் குரைத்தல் போன்றவை உங்கள் காதினை நன்கு பாதுகாக்கும். குளித்த பிறகு காதினை மெல்லிய டவலினினால் நன்கு துடையுங்கள். காதை சுத்தம் செய்ய கடப்பாரைகளை உபயோகிக்காதீர்கள்.

காதுவலிக்கு தீர்வு :

மருத்துவ சிகிச்சை என்பது அவசியமான ஒன்று.

தலைமுடி டிரையரை காதுக்கு ஒரு அடி தள்ளி வைத்து ஆன் செய்யுங்கள். காதின் உள்திரவம் எளிதில் நகரும். அதில் வலி குறையும்.

மெல்லிய துணியை சுடுநீரில் நனைத்து பிழிந்து சுமார் 10 நிமிடங்கள் வையுங்கள்.

வயது கூடி முதுமை அடையும் பொழுது உடலின் செயல்பாடுகளில் பல மாற்றங்கள் இருக்கும். அதில் காது கேளாமை குறைபாடும் ஒன்று. மூன்றில் ஒருவருக்கு இது சாதாரணமாக ஏற்படுகின்றது.

முதுமையில் வயது கூடும் பொழுது சிலருக்கு கேட்கும் திறன் குறைந்து கொண்டே வரும். இதன் காரணம் உள் காதில் ஏற்படும் மாற்றங்களே.

உடல் சுருங்குவதன் காரணமாக உள் காதில் அமைப்பு மாறுகிறது. காதுக்கு செல்லும் ரத்த ஓட்டம் மாறுபடுகின்றது. மூளையின் செயல்பாட்டில் மாறுதல் ஏற்படுகின்றது.

காதில் உள்ள மிக நுண்ணிய முடிகள் மூளைக்கு ஒய்வினை அளிக்கும். இந்த முடிகள் அழிந்து விடுகின்றன.

Related posts

நம்ப முடியலையே… 15 கிலோ எடை குறைத்த சிம்பு! புதிய புகைப்படம்…

nathan

வௌ்ளைப்படுதல் பிரச்னையில் இருந்து மிக எளிதாகத் தீர்வு காண மாதுளம் பூ!…

nathan

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது முக அழகையும் இது பாதுகாக்கிறது!…

sangika

முகம் பளபளப்பாக சில அழகு குறிப்புகள்…!

nathan

பளபளப்பான முகத்தை பெற அருமையான வழி உள்ளது.

nathan

கண்களை அழகாக காட்ட

nathan

அழகு குறிப்புகள்,அழகுடன் திகழணுமா?,beauty tips tamil

nathan

அகலமான நெற்றி உடைய பெண்ணா நீங்கள் அப்போ இத படிங்க!….

sangika