பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு எளிதில் நோய் பரவும் என்பது அனைவரும் அறிந்ததே. இன்றைய சூழலில் மன நோயும் எளிதில் வருகிறது.
குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பல. அதில் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களாலும், பிற்காலத்தில் அவர்களுக்கு மனநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
சிறு சிறு தொற்றுகளுக்கெல்லாம் குழந்தைகளுக்கு அடிக்கடி மருந்து தருவது பலரின் வழக்கமாக உள்ளது.
அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை அருந்துவதால் 84 சதவிகிதம் மன நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜாமா சைகியாட்டரி நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைப்பற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நோய்தொற்று ஏற்பட 90 சதவிகித காரணம் குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாதது தான்.
உடல்நலக் குறைபாடு இருப்பது பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியும்.
ஆனால், மனநலக் குறைபாடு இருப்பது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட நபருக்கே சில நேரங்களில் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு.
சிறு அலட்சியத்தால் நாளடைவில் மனச்சோர்வு, மன அழுத்தம், ஆளுமை இன்மை, கவன பற்றாக்குறை, ஹைபா்-ஆக்டிவிட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.