தேவையானப்பொருட்கள்:
மா, பலா, வாழை துண்டுகள் (சேர்த்து) – ஒரு கப்,
பால் – 2 கப்,
சர்க்கரை – ஒன்றரை கப்,
வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன், முந்திரி – 5.

செய்முறை:
நெய்யில் முந்திரியை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் மாம்பழத் துண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து வதக்கி எடுக்கவும். பலாச்சுளைகளை தனியே வேகவைக்கவும். பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். பால் நன்கு சுண்டும்போது பழங்களை நன்கு மசித்துச் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் எசன்ஸ் சேர்த்து, வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.