அழகு குறிப்புகள்

ஓவன் இல்லாமல் சுவையான பிட்சா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 2 1/2 கப்

* மைதா – 1/2 கப்

* பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* தயிர் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – 1 முதல் 1 1/4 கப்

டாப்பிங்கிற்கு…

* குடைமிளகாய் – 1/4 கப் (நீளமாக நறுக்கியது)

* வெங்காயம் – 1/4 கப் (நீளமாக நறுக்கியது)

* பேபி கார்ன் – 1/2 கப் (நீளமாக நறுக்கியது மற்றும் பாதியாக வேக வைத்தது)

* ஆரிகனோ – 1/4 டீஸ்பூன்

* பிட்சா சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்

* மெசரெல்லா சீஸ் – 1/2 கப்

* சில்லி பிளேக்ஸ் – 1 சிட்டிகை

* எண்ணெய் – தேவையான அளவு[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]tawa pizza 1647346001

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, மைதா மற்றும் பேக்கிங் பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் பேக்கிங் சோடா, சர்க்கரை, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

* பின்பு சிறிது சிறிதாக நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் பிசைந்த மாவை ஒரு தட்டு கொண்டு மூடி 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* அதற்குள் டாப்பிங்கை தயாரித்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பேபி கார்ன், குடைமிளகாய், வெங்காயம், ஆரிகனோ மற்றும் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிசைந்த மாவானது சற்று உப்பி வந்ததும், அதை ஒரு முறை நன்கு பிசைந்து, 3 உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு உருண்டையை எடுத்து அதை தட்டையாக பிட்சாவின் பேஸ் போல் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் ஃபோர்க் கொண்டு ஆங்காங்கு துளையிட வேண்டும்.

* பின்பு அதன் மேல் எண்ணெயைத் தடவ வேண்டும். அதன் பின் தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி வைத்துள்ள பேஸை வைத்து, குறைவான தீயில் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் பேஸை திருப்பிப் போட்டு, 3 நிமிடம் வேக வைத்து, அதன் மேலே பிட்சா சாஸை பரப்பி, வதக்கி வைத்துள்ள காய்கறிகளைப் பரப்பி, துருவிய சீஸையும் பரப்பி, மூடி வைத்து 2 நிமிடம் சீஸ் உருகும் வரை வேக வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, சூடாக இருக்கும் போது துண்டுகளாக வெட்டி பரிமாறினால், பிட்சா தயார். இதேப் போல் மற்ற இரு உருண்டைகளையும் செய்யுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button