வாழ்கையில் நான் இன்னும் செட்டில் ஆகவில்லையே அதற்குள் எனக்கு திருமணமா? என்று கேட்கும் பெண்கள் திருமணத்தை தள்ளிப்போடுகின்றனர். அதுமட்டுமா ஒருவேளை இவர்களுக்கு திருமணமானாலும், இப்போதே எதற்கு குழந்தை, இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கருதி குழந்தை பிறப்பை தள்ளிப்போடுகின்றனர்.
இதற்காக கருத்தடை மாத்திரைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பழக்கம் வழக்கமாகி வருகிறது.
மேலும் திருமணத்தை மீறிய பந்தத்தை நாடு சிலம் பெண்க ளும் அதிகளவில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்று கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும் பெண் களுக்கு உடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் அவற்றில் ஒன்றுதான் உடல் எடை கூடுதல்.
இந்த கருத்தடை மாத்திரைகள், உடலுக்குள் ஹார்மோன் சம்பந்தப்பட்ட வை என்பதால் அதிக பசியினைத் தூண்டி அதிகளவில் உணவினை உட்கொள்ள செய்திடும்.
மேலும் உடலுக்குள் இருக்கும் நீரினை, உடலில் தேங்கும். இதனால் உடல் எடைகூடும்.
குறைந்த ஹார்மோன் ( #Hormone ) கொண்ட கருத்தடை மாத்திரைக்கும் மருத்துவ த்தில் உள்ளன.
கருத்தடை மாத்திரைகளை பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.