29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
check
ஆரோக்கியம்மருத்துவ குறிப்பு

இதை உண்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதேஅளவு அதனால் ஆபத்துகள் உண்டு

இயற்கை நமக்கு அளித்துள்ள பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் பலருக்கும் விருப்பமான ஒரு காய்கறி ஆகும். இந்த இலைக்காய்கறி உங்களுக்கு பல அற்புத பலன்களை வழங்கக்கூடியது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இது இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது.

முட்டைக்கோஸால் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதேஅளவு அதனால் ஆபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு முட்டைகோஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தயாராகிக்கொள்ளுங்கள்.

இதனால் ஏற்படும் பாதிப்புகளின் அளவுகள் உங்கள் உடல் வலிமையை பொறுத்து மாறுபடும். இந்த பதிவில் முட்டைக்கோஸால் ஏற்படும் பகைவிளைவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வாயுக்கோளாறு

முட்டைகோஸால் வாயுக்கோளாறு ஏற்படும் எனது பலரும் அறியாத ஒரு தகவலாகும். ஆனால் அதுதான் உண்மை. ப்ரோக்கோலி, காலிப்ளவர், பீன்ஸ் போன்ற உணவுகளை போலவே முட்டைகோஸும் உங்கள் சிறுகுடலில் உள்ள என்சைம்களால் எளிதில் செரிக்கக்கூடிய காய் அல்ல.

அவை உங்கள் பெருங்குடலை அடைந்தவுடன் அவற்றின் மீது ஏற்படும் பாக்டீரியா தாக்குதல் வாயுவை உண்டாக்கும். உங்கள் வயிற்றில் வீக்கமோ அல்லது அடிக்கடி வாயுவெளியேறும் பிரச்சினையோ இருந்தால் அதற்கு காரணம் முட்டைக்கோஸாகத்தான் இருக்கும்.

இந்த கையை சாப்பிடாமல் தவிர்ப்பதே இதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாகும்.

check

தைராய்டு பிரச்சினை

அதிகளவு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்கள் தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாட்டில் தலையிடக்கூடும்.

இதற்கு காரணம் முட்டைகோஸ் உங்கள் தைராய்டு சுரப்பி போதுமான அளவு அயோடின் சத்தை எடுத்துக்கொள்ள விடாமல் தடுக்கிறது.

அப்படி இருக்கும்போது அதிகளவு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்களுக்கு அயோடின் பற்றாக்குறையை ஏற்படுத்தும், இதனால் உங்களுக்கு ஹைப்போதைராய்டு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இதனை எப்போதாவது சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

குறிப்பாக காலிப்ளவர், கீரை, பருப்புகள், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது தைராய்டு சுரப்பியில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

வயிற்றுப்போக்கு

செரிமான மண்டல கோளாறுகள் மற்றும் வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் முட்டைகோஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதற்கு காரணம் இதிலுள்ள ரெபினோஸ் என்னும் பொருளாகும், இது எளிதில் செரிக்காது.

முட்டைகோஸில் அதிகளவு எளிதில் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது, 100 கிராம் முட்டைகோஸில் 2.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.

பொதுவாக நார்ச்சத்துக்கள் உங்கள் செரிமான மண்டலத்திற்கு அதிக நன்மைகளை வழங்கக்கூடியது, ஆனால் அதிகளவு நார்ச்சத்து நிச்சயம் பிரச்சினைதான்.

இரத்த சர்க்கரை அளவை குறைப்பது

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்னும்போது முட்டைகோஸ் எவ்வளவு நன்மைகளை வழங்குகிறதோ அதே அளவு தீங்கையும் ஏற்படுத்தக்கூடியது.

இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கும் தன்மை இருப்பதால், அதிகமாக சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கக்கூடும்.

நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் இது ஹைபோக்லேசமியா குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

குழந்தைகளுக்கு ஏற்றதல்ல

பெரியவர்களுக்கு முட்டைகோஸ் எப்படி வீக்கத்தையும், வாயுக்கோளாறையும் ஏற்படுத்துகிறது என்பதை முன்னரே பார்த்தோம். நீங்கள் பாலூட்டும் தாயாக இருந்தால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் குழந்தையின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொதுவாகவே குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அம்மாக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்கள் இரவு நேரத்தில் முட்டைகோஸ் சாப்பிட்டால் அது குழந்தைகளை இரவு முழுவதும் அழவைக்கும்.

மருந்துகள் மீது குறுக்கீடு

இரத்தத்தை உறையவைக்க வைட்டமின் கே என்பது அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். முட்டைகோஸில் உள்ள வைட்டமின் கே இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது ஆனால் அதேசமயம் இரத்தம் உறைய சில மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

ஒரு கப் முட்டைகோஸில் 53 மைக்ரோகிராம் வைட்டமின் கே உள்ளது. ஊட்டச்சத்து நிபுனர்களின் கூற்றுப்படி ஆண்கள் ஒருநாளைக்கு 120 மைக்ரோகிராமும், பெண்கள் ஒரு நாளைக்கு 87 மைக்ரோகிராம் வைட்டமின் கே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த அளவு அதிகரிக்கும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

Related posts

மூலநோயைக் குணப்படுத்தும் துத்திக்கீரை! மூலிகைகள் கீரைகள்!!

nathan

மாதவிலக்கின்போது ஏற்படும் வயி்ற்று வலி

nathan

சூப்பர் டிப்ஸ்… விஷ பூச்சிகள் கடித்து விட்டதா உடனே இந்த மூலிகை உபயோக படுத்துங்க..

nathan

தெரிஞ்சிக்கங்க…பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை!

nathan

உங்க பாத்ரூம் ‘கப்பு’ அடிக்குதா? அதைப் போக்க சில வழிகள்!!!

nathan

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்

nathan

இதோ எளிய நிவாரணம்! தோள்பட்டை, கழுத்து வலியை போக்கும் பயிற்சிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுப்பதால் இருதய பிரச்சனைகளுக்கான அபாயம் குறையுமா?

nathan

ஆரோக்கியமான பற்களைப் பெறுவதற்கான முக்கியமான டயட் டிப்ஸ்…தெரிஞ்சிக்கங்க…

nathan