28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
hair1
அழகு குறிப்புகள்கூந்தல் பராமரிப்பு

தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு கற்பூரத்தை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்…

கற்பூரம் அதன் இதமளிக்கும் பண்புகளால் அறியப்படுகிறது. கற்பூரத்தின் இனிமையான வாசனை நம் மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்த உதவுகிறது. ஆனால் நம் அன்றாட அழகு படுத்திகளோடு இதைச் சேர்த்தால், அது அழகை மேம்படுத்துவதிலும் உதவுமென்று உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டது சரிதான். நம் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு கற்பூரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

hair1

தலைமுடி பராமரிப்பு

உங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒரு எளிதான பணி அல்ல. அதற்கு நிறையப் பொறுமை மற்றும் முயற்சி தேவைப்படுகிறது. இந்தக் கட்டுரையில், உங்கள் முடியை நன்கு அழகுபடுத்த கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றி நாம் பேசுவோம். ஹேர் மாஸ்க்குகளை தயாரிப்பதற்கு கற்பூரத்தை எண்ணெய் வடிவில் பயன்படுத்தலாம்.

இந்த கற்பூர எண்ணெயின் சிறந்த குணப்படுத்தும் பண்புகள் மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பவற்றை பார்க்கலாம்,

வலுவான முடியைப் பெற

பலவீனமான முடிக்கு, முடி மாசுபடுதல், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

தேவையான பொருட்கள்

1. கற்பூர எண்ணெய்

2. 1 முட்டை

எப்படி உபயோகிப்பது?

முதலாவதாக, ஒரு சுத்தமான கிண்ணத்தில் முழு முட்டையைச் சேர்க்கவும். அடுத்து, கற்பூர எண்ணெயைச் சேர்த்து இரண்டு பொருட்களையும் நன்றாகக் கலக்கவும். இதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் பயன்படுத்துவதைத் தொடங்குங்கள். முடியின் வேர்களிலிருந்து நுனி வரை பூசுங்கள் . அது 15-20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். ஒரு லேசான சல்பேட் அற்ற ஷாம்பூ- வால் உங்கள் முடியை நன்றாகக் கழுவுங்கள். நல்ல முடிவுக்கு வாரம் ஒரு முறை இந்த தீர்வைப் பயன்படுத்துங்கள்.

முடி வளர்ச்சிக்கு

கற்பூர எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

1. கற்பூர எண்ணெய்

2. தயிர்

3. முட்டைகள்

எப்படி உபயோகிப்பது?

இது முடி வளர்ச்சிக்கு வேகமாக உதவும் நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான முடி மாஸ்க் ஆகும். ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து, கற்பூர எண்ணெய் மற்றும் தயிர் சேர்க்கவும். அடுத்து, 1 முழு முட்டையை கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். உங்கள் முடி மிகவும் நீண்டதாக இருந்தால் நீங்கள் மாஸ்க்கிங்கிற்கு இன்னுமொரு முட்டையைப் பயன்படுத்தலாம். இப்போது ஒரு ப்ரஷ் -ஐ எடுத்து உங்கள் தலைமுடி பகுதியில் மெதுவாக அனைத்து முடிகளிலும் இந்தக் கலவையைப் பூசவும். மாஸ்க்குடன் உங்கள் முழு முடியையும் மூடிய பிறகு 30-45 நிமிடங்கள் காத்திருங்கள், பின்னர் சாதாரண தண்ணீரில் ஒரு லேசான ஷாம்பு கொண்டு அதை சுத்தம் செய்யலாம்.

மென்மையான முடி

உறைந்த, வறண்ட மற்றும் அடங்காத முடி போன்றவை நாம் ஒவ்வொரு நாளும் போராடுகின்ற மிகவும் பொதுவான முடி பராமரிப்புப் பிரச்சினைகளில் சிலவாகும். இந்த பிரச்சினைகளை சமாளிக்க கற்பூர எண்ணெய் நல்ல தீர்வாகும்.

தேவையான பொருட்கள்:

1. கற்பூர எண்ணெய்

2. தேங்காய் எண்ணெய் / ஆலிவ் எண்ணெய்

எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கற்பூர எண்ணெய், தேங்காய் எண்ணெய் / ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக ஊற்றி நன்கு கலக்க வேண்டும். உங்கள் முடிகளைப் பகுதிகளாக பிரிக்கவும், இந்தக் கலவையை உங்கள் முடியில் தடவி 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு சாதாரண தண்ணீரில் அதைக் கழுவவும்.

Related posts

சர்வைவரில் ஆபத்தில் சிக்கிய போட்டியாளர்! அலறி ஓடி ஆக்‌ஷனில் குதித்த அர்ஜூன்…

nathan

இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பால் நேர்ந்த விபரீதம்

nathan

இந்தியாவில் திருமணமான 1 ஆண்டில் மர்மமாக இறந்த 24 வயது கேரள பெண் மருத்துவர்!

nathan

சூப்பரான இனிப்பான… மங்களூர் போண்டா

nathan

என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க டிப்ஸ்

nathan

சூப்பரான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

nathan

எண்ணெய்தன்மை கொண்ட கூந்தல் பராமரிப்பு

nathan

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும்!…

sangika

தைராய்டு குணமாக எளிய வழிகள் !அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க..

nathan