25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
119 1
அழகு குறிப்புகள்கூந்தல் பராமரிப்புசரும பராமரிப்புமுகப் பராமரிப்புமுகப்பரு

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

அற்புதம் நிறைந்த அத்தி..!

பல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. இதற்கென்று எப்போதும் தனித்தன்மை இருந்து கொண்டே இருக்கும்.

ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம். நீங்கள் அத்தியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம்.

பருக்களை போக்குவதற்கு

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தாலே போதும், பருக்கள் மறைந்து விடும்.

119 1

தேவையானவை :-

அத்தி பழம் 1

தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் அத்திப்பழத்தை அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த அத்திப்பழ கூழுடன் தேனை கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் இதனை கழுவி கொள்ளலாம். அத்திப்பழத்தின் அற்புத குணம் உங்கள் முகத்தை பருக்கள் இல்லாமல் மாற்றும்.

அழுக்குகளை நீக்க

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்குவதற்கு ஒரு எளிய வழி உள்ளது.

இதற்கு தேவையானவை…

அத்திப்பழம் 1

சர்க்கரை 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை :-

அத்திப்பழத்தை அரைத்து கொண்டு அவற்றுடன் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். பிறகு சர்க்கரையை பொடியாக அரைத்து கொண்டு, இவற்றுடன் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தின் அழுக்குகள் நீங்கி விடும்.

முக பொலிவிற்கு

அத்திபழத்தை கொண்டு எப்படி முக பொலிவை பெறுவது என்பதை இந்த குறிப்பில் தெரிந்து கொள்வோம்.

தேவையானவை..

அத்திப்பழம் 1

யோகர்ட் 2 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் அத்திப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு யோகர்ட் மற்றும் தேனை ஒன்றாக கலக்கி கொள்ளவும். இந்த கலவையை அத்திப்பழத்துடன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அத்தியில் உள்ள வைட்டமின் சி முகத்தை மினுமினுப்பாக்கும்.

முடி வளர்ச்சிக்கு

முடி உதிர்வு, முடி உடைதல், வறண்ட தலை ஆகிய பிரச்சினைக்கு தீர்வை அத்தி பழம் தருகிறது. இதற்கு பெரியதாக எதுவும் செய்ய தேவையில்லை. மாறாக தினமும் 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அல்லது அத்திப்பழ எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்குமாம்.

இது எப்படி சாத்தியம்..?

அத்தி பழத்தை கொண்டு நமது உடலின் பல் வகையான பாதிப்புகளையும் நோய்களையும் நம்மால் சரி செய்ய முடியும். இதற்கு முழு காரணமும் அத்தியில் உள்ள சத்துக்கள் தான். அத்திப்பழத்தில் வைட்டமின் எ, சி, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புசத்து, நீர்சத்து அதிகம் நிறைந்துள்ளது தான் இவற்றின் சக்திக்கு காரணம்.

Related posts

வெட்டிவேரை சேர்த்து குளிர வைத்து பிறகு வடிகட்டி கொள்ளவும். முகத்தை சுத்தம் செய்ததும் வெட்டிவேர் ஸ்ப்ரே செய்துகொள்ளவும்..

nathan

இளம் கிரிப்டோ கோடீஸ்வரரின் கடைசி டுவீட்: கடலில் மிதந்த சடலம்

nathan

கோடைக்காலத்தில் உடல் முழுவதும் பராமரிக்க டிப்ஸ்

nathan

வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவும் பொருட்கள்!!!

nathan

சருமமே சகலமும்!

nathan

திராட்சைகளையும் அழகை மெருகூட்ட பயன்படுத்தலாம்

nathan

பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க நிரந்தர சிகிச்சை!…

sangika

உங்க முகச்சுருக்கத்தை உடனடியாகப் போக்க வேண்டுமா இதோ சில டிப்ஸ்…?

nathan

கருவளையம் நீங்க இத செய்யுங்கள்!…

sangika