26.6 C
Chennai
Saturday, Dec 28, 2024
பெண்கள் மருத்துவம்

கர்ப்பம் தரிக்காமைக்கான முக்கிய காரணி…

கடந்த நூற்றாண்டை விட பெண்களின் வாழ்க்கை பாரியளவில் மாற்றம் அடைந்துள்ளது என்றே கூறலாம். வீட்டிற்குள் முடங்கி இருந்த பெண்கள் கல்வி, வேலை வாய்ப்புக்கள் என பல்வேறு காரணங்களிற்காக வெளியே வர ஆரம்பித்து விட்டனர். இன்று அவர்களது தேவைகளை அவர்களே நிறைவேற்ரும் அளவிற்கு தங்களை வளர்த்துக் கொண்டனர்.

ஆண்களும் பெண்களை மத்தித்து அவர்களிற்கு மனதளவிலும் உடலளவிலும் உறுதுணையாக இருந்தால் அவர்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

இயற்கையிலேயே பெண்களிற்கு மட்டுமே கர்ப்பம் தரித்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை இறைவன் கொடுத்துள்ளார்.

ஆனால் இன்றைய நவீன உலகத்தில் மனாழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தல் போன்றவற்றால் கர்ப்பம் தரிப்பதில் பல சிக்கல்களை பெண்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

குழந்தைப் பேறு இன்மை தான் பெருகி வரும் ஆரோக்கிய பிரச்சினைகளில் மிகவும் முக்கியமானது. ஆறில் ஒரு தம்பதியினர் குழந்தைப் பேறின்மையால் பாதிக்கப்படுள்ளானர்.

கர்ப்பம் தரிக்காமைக்கான முக்கிய காரணி சரியான உணவுப்பழக்கங்களைப் பின்பற்றாமையே. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்ருவதனால் இந்தப் பிரச்சினையில் இருந்து விரைவான தீர்வைப் பெற முடியும்.

தாய்மை அடைவதற்கு பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் சில:

1. பீன்ஸ்.

பீன்ஸ் என்றாலே அருவருப்படாமல் அதை விரும்பு உட்கொள்ள ஆரம்பித்து விடுங்கள். இதில் உள்ள புரோட்டின் மற்றும் இரும்புச் சத்து கருமுட்டைகளின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் இதில் அதிகளவான நார்ப் பொருட்களும், குறைந்த கொழுப்பும் இருப்பதனால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும். எனவே பீன்ஸை சிற்றூண்டியாகவே அல்லது கறிகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுவது சிறந்தது.

2. ஒமேகா-3 எண்ணெய்.

ஒமேகா-3 இல் உள்ள EPA, DHA கருத்தரிப்பதற்கு மிகவும் அவசியமானது. இது இடுப்புப் பகுதி மற்று கருமுட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளின் வீக்கத்தைக் குறைத்து உயிரணு முட்டையை சென்றடைவதைத் தூண்டும்.

எனவே கருத்தரிப்பதற்கு 3 மாதங்களிற்கு முன்பாக இருந்தே ஒமேகா-3 எண்ணெய்யை பயன்படுத்துவது சிறந்தது.

3. பெரி.

இதில் உள்ள அண்டிஒக்ஸிடன் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என நாம் அறிந்ததே. இது உடல் உள்ளுறுப்புக்கள் மற்றும் கலங்கள் கதிர் வீச்சுக்களால் பாதிப்படையாமல் பாதுகாப்பதுடன், உடலின் முழுமையான ஆரோக்கியத்தை பேணுகிறது. இதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

4. பால்ப் பொருட்கள்.

பாலில் உள்ள கல்சியம் எலும்புகளிற்கு மட்டுமல்லாது இனப்பெருக்கத் தொகுதிக்கும் சிறந்தது.

இதில் உள்ள போலியமைன் எனும் புரோட்டின் கரு முட்டைகளின் செயற்பாட்டை மேம்படுத்துவதுடன் கருப்பைகளின் ஆரோக்கியத்தையும் பேணும். இதனால் குழந்தயின்மை பிரச்சினை நீங்கும்.

5. கருணைக் கிழங்கு.

மாதவிடாயின் முதல் இரண்டு வாரங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்களை கருணைக் கிழங்கு சாப்பிடுவதனால் அதிகப்படுத்தலாம்.

இது புரோஜஸ்டிரோன், ஈஸ்ரீஜன் எனும் ஹார்மோன்களின் கட்டுப்படுத்துவதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

6. பச்சை இலை வகைகள்.

பச்சை இலைகளில் உள்ள போலேட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் பெண்களின் உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. இது மனாழுத்தத்தை குறைத்து உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதனால் மாதவிடாய் சுழற்சி சீராக்கப்படுவதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

7. பாதாம்.

பாதாம் சுவையானது மட்டுமல்ல, இதில் விட்டமின் –ஈ, செம்பு, இரும்பு, மங்கனீஸ், பயோட்டின் காணப்படுகிறது. இதில் உள்ள விட்டமின் –ஈ ஆரோக்கியமான கருமுட்டை உருவாதற்கு உதவுகிறது.

Related posts

பெண்களே நீங்கள் அதிகம் கோபப்படுபவரா? அப்ப இத படிங்க!…

sangika

பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்த இதை செய்யங்கள்!…

sangika

குட்டிக்குழந்தைக்கு விக்கல் எடுக்குதா? என்ன செய்ய வேண்டும்…!

nathan

உங்களுக்கு தெரியுமா கருத்தடைக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை – வந்துவிட்டது கருத்தடை ஆபரணம்!

nathan

பிரசவ காலத்தில் வயிற்றில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும் முறைகள்

nathan

எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.,) (P C O S)

nathan

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

nathan

நீர்க்கட்டிகளை விரட்டினால்… வாரிசு ஓடி வரும்!

nathan