25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
karumpu
அழகு குறிப்புகள்ஆரோக்கியம்கூந்தல் பராமரிப்பு

கரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன….

கரும்பு ஜூஸ் பெரும்பாலானவர்களுக்கும் பிடித்த பானம். செயற்கை இனிப்பு எதுவும் சேர்க்காமல் இயற்கையாகவே இனிப்புச் சுவை கொண்ட தித்திக்கும் இந்த பானம் யாருக்குதான் பிடிக்காது. கரும்புச் சாறில் கிட்டதட்ட 15 சதவீதம் இயற்கை சர்க்கரையும் வைட்டமின்களும், ஆர்கானிக் உப்பும் நிறைந்திருக்கிறது.

இதில் உங்களுக்கு கூடுதல் சுவை தேவைப்பட்டால் அதில் சிறிது எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ளலாம். இத்தகைய இந்த கரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதுபற்றி இங்கே விளக்கமாக் காணலாம்.

karumpu

ஊட்டச்சத்துக்கள்

கரும்பில் கிளைக்கோலிக் அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. அதோடு மட்டுமல்லாது, வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்திருக்கின்றன.

அதோடு அதிக அளவிலான கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் இதற்குள் இருக்கின்றன.

முகப்பருக்கள் நீங்க

முகப்பருக்களால் அவதிப்படுகிறவர்கள் நிறைய வழிகளில் அதை சரிசெய்ய முயற்சிகள் நிறைய செய்து கொண்டிருப்பீர்கள். கடைகளில் விற்கும் க்ரீம்களோ அல்லது வீட்டிலுள்ள ஏதாவது ஒரு பொருளையோ பயன்படுத்துவோம்.

ஆனால் கரும்புச் சாறு முகப்பருவை சரிசெய்யும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. இதிலுள்ள கிளைக்கோலிக் அமிலம் சருமத்தில் முகப்பரு உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது.

சருமத்தில் உண்டாகிற கழிவுகளையும் இறந்த செல்களையும் நீக்கி சுத்தப்படுத்துகிறது.

உடல் ஈரப்பதம்

உங்களுடைய சருமம் கொஞ்சம் வறட்சியாக, சோர்வாக இருக்கிறதா? கரும்புச் சாறில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை மாய்ச்சராக வைத்திருக்க உதவுகிறது. அதோடு சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை நீண் நேரத்துக்குத் தக்க வைத்திருக்கும்.

தூய்மைப் படுத்துதல்

சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை இந்த கரும்புச் சாறு முழுமையாக வெளியேற்றுகிறது. அதோடு சருமம் சேதமடைதல் மற்றும் உடைதல் ஆகிய பிரச்சினைகளையும் சரிசெய்கிறது.

சரும சிகப்பழகு

இதில் கிளைக்கோலிக் அமிலம், வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன என்று பார்த்திருக்கிறோம். அதோடு சருமத்தின் நிறத்தை அதிகரித்து சிகப்பழகைக் கூட்டுவதில் நமக்கு மிகச் சிறந்த பலனை கரும்புச் சாறு கொடுக்கிறது.

நீங்கள் பயன்படுத்தத் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே முகத்தில் இருந்த சோர்வு நீங்கி. முகத்தின் நிறம் கூடியிருப்பதைக் காண முடியும்.

தலைமுடி வளர்ச்சி

வெறும் சரும அழகுக்கு மட்டுமல்ல. தலைமுடியை வேகமாகவும் நன்கு நீளமாக வும் வளரச் செய்வதில் இந்த கரும்புச் சாற்றுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. கரும்புச் சாறில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

அவை முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன. தலைமுடி வறட்சி சிலருக்கு என்னதான் முடியை பராமரித்தாலும் பூஞ்சைத் தொற்றின் காரணமாக முடியில் பாடுகு, கூந்தல் வறட்சி, வேர்க்கால்கள் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்றவை நிகழ்கின்றன.

கரும்புச் சாறில் உள்ள ஊட்டச்சத்துக்களை கூந்தலுக்கும் வேர்க்கால்களுக்கும் ஊட்டத்தைக் கொடுத்து வலிமையை அதிகப்படுத்துகிறது. சுந்தலின் வேர்க்கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வாய் துர்நாற்றம்

என்ன தான் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கினாலும் கூட சிலருக்கு வாய் துர்நாற்றம் இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி இருப்பவர்கள் அடிக்கடி கரும்பு ஜூஸ் குடித்து வந்தால் இந்த பிரச்சினையை சரிசெய்துவிட முடியும்.

இதில் மிக அதிக அளவில் பாஸ்பரசும் கால்சியமும் இருப்பதால் பல் சொத்தை, பற்களின் எனாமலை பாதுகாத்தல் மற்றும் வாயின் கெட்ட துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறது.

உடனடி ஆற்றல்

நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தீர்கள் என்றால் உடனடியாக எனர்ஜி கிடைக்க வேண்டுமென்றா்ல உங்களுடைய சாய்ஸ் நிச்சயம் கரும்புச் சாறாக தான் இருக்க வேண்டும்.

குடித்து முடித்தவுடனேயே ஒருவித ஆற்றல் உண்டாகும். ஏனென்றால் கரும்பு ஜூஸில் மிக அதிக அளவில் புரதச் சத்தும் மினரல்களும் உடலுக்கு வலிமை தரும் கார்போஹைட்ரேட்டும் இருக்கின்றன.

தங்களுடைய உடலுக்கு வலுவூட்ட கரும்புச் சாறை தேர்ந்தெடுக்கிறவர்கள் இதை முழுமையாக பெற்றுவிடுகிறார்கள். உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

எலும்புகள் வலிமையடைய

கரும்பை அப்படியோ சாப்பிடுவதோ அல்லது கரும்புச் சாறாக எடுத்துக் கொள்வதோ எலும்புகள் மற்றும் பற்களை வலிமையடையச் செய்கிறது. அதோடு பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க கரும்புச் சாறு உதவுகிறது.

ஏனென்றால் இந்த கரும்புச் சாற்றி்ல் இயற்கையான கால்சியம் இருக்கிறது. அதனால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலிமையைக் கொடுக்கிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்குக் கூட இது மிக ஆரோக்கியமான பானங்களாக இருக்கும்.

மன அழுத்த மேம்பாடு

இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். உங்களுடைய மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு மிகச்சிறந்த தேர்வாக கரும்புச் சாறைக் குறிப்பிடலாம்.

இதிலுள்ள மக்னீசியம் மன அழுத்தத்தைத் தூண்டுகின்ற ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகிறது. நம்முடைய உடலில் உள்ள இன்சோமேனியா பிரச்சினையைக் குறைத்து நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்க கரும்பு ஜூஸ் உதவும். அது உங்களுடைய மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும்.

எடையைக் குறைக்க

உங்கள் உடம்பில் அங்கங்கே தொங்குகிற தேவையில்லாத சதைகளை வெட்டிவிட்டால் எப்படி இருக்கும். சிக்கென்று ஆகிவிடுவீர்கள் அல்லவா? அப்படி ஒரு அற்புதத்தை இந்த கரும்புச்சாறு செய்கிறது.

தொடர்ந்து கரும்புச் சாறு குடித்து வந்தீர்கள் எள்றால் அதிலுள்ள நார்ச்சத்தானது உடலில் தேங்குகின்ற அதிகப்படியான கொழுப்புகளைக் கரைக்கும். இதில் வெள்ளை சர்க்கரை எதுவும் நாம் சேர்க்கத் தேவையில்லை.

இயற்கையாகவே அதில் சர்க்கரை இருக்கிறது. அதனால் உடல் எடையைக் குறைத்து கொழுப்புச் சேராமல் உடலைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தொடர்ச்சியாக கரும்புச் சாறைக் குடித்து வருவது நல்லது.

Related posts

முக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்

nathan

மூலிகை ஃபேஷியல்:

nathan

கர்ப்ப காலத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கான காரணங்கள்!

nathan

இளமையைப் பராமரிக்க இதை செய்யுங்கள்!….

sangika

சுவையான மிளகாய் சப்ஜி

nathan

மீராவுக்கு உதவியதால் சிக்கிய பிரபல தோழி….! போதைப்பொருள்…..உல்லாசம்..

nathan

வீட்டிலேயே கெரட்டின் தலைமுடி சிகிச்சை செய்ய,, அதிக செலவில்லாமல், வீட்டிலேயே பழைய சாதத்தை கொண்டு கெரடின் சிகிச்சை அளிக்கலாம்.

nathan

கிட்னி ஸ்டோன் பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் கூடவே வலியையும் அதிகமாக கொண்டிருப்பார்கள். இந்த வலி குறைக்கும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்….

nathan

முக அழகு குறிப்புகள்: சருமத்தை மென்மையாக்க இரவில் தேன் செய்யும் மாயம் இது

nathan