27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
Tee1
மருத்துவ குறிப்பு

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், செல்கள் பரவுவதையும் தடுக்க…

ஷைடிக் காளான்கள்

உலகில் ஆயிரக்கணக்கான காளான் வகைகள் உள்ளது. பொதுவாகவே காளான்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அதில் குறிப்பாக ஷைடிக் காளான்கள் பல நன்மைகளை வழங்கக்கூடியது. இதில் உள்ள பீட்டா க்ளுக்கோன் பொருளான லென்டினான் குறிப்பிட்ட சில புற்றுநோய்களை தடுக்கக்கூடும்.

ஜப்பானில் ஷைடிக் காளான்களை கர்ப்பப்பை புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மீதான ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சோயா பொருட்கள்

சோயா மில்கையும், சோயா பொருட்களையும் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கான அடுத்த நிலையாகும். கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சோயா பொருட்களை பயன்படுத்துவது அதன் அறிகுறிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க பயன்படும்.

ஐசோபவோன்கள் என்னும் சோயாபொருட்களில் உள்ள மூலப்பொருளானது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், செல்கள் பரவுவதையும் தடுக்கிறது. கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும்போது அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க சோயாபொருட்கள் பயன்படும்.

புதினா டீ

இது கர்ப்பப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை அல்ல ஆனால் இது உங்கள் உடலை புற்றுநோய்க்கு எதிராக போராட தயார்படுத்த இது உதவும். இது வயிற்றில் ஏற்படக்கூடிய கோளாறுகளை சரிசெய்யும், அதேசமயம் இது கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நன்மைகளை வழங்கும்.

இதில் உள்ள அதிகளவு ஆன்டிஆக்சிடண்ட்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

Tee1

நீர்ச்சத்து

பொதுவாக புற்றுநோய்கள் உங்கள் குடல், புரோஸ்ட்ரேட், மற்றும் அனைத்து உடலுறுப்புகளையும் பாதிக்கக்கூடும். கர்ப்பபை புற்றுநோயால் ஏற்படும் முக்கியமான கோளாறுகள் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகும்.

இந்த இரண்டு நிலைகளுமே மிகவும் ஆபத்தனதாகும், இதனை சரிசெய்ய அதிக நீர் குடிக்க வேண்டியது அவசியம். அதிக நீர் குடிப்பது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உதவும்.

சிவப்பு வெங்காயம்

வெங்காயம் என்பது மிகவும் பொதுவான அதேசமயம் மிகவும் உபயோகமான காய்கறியாகும். உண்மையில் வெங்காயத்தில் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடிய பொருட்கள் நிறைய உள்ளது, கார்செடின், அப்பிஜெனின் மற்றும் ஆந்தோசியயின்கள் போன்றவை புற்றுநோய் செல்களை அழிக்க இயலும்.

சிவப்பு வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவது உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் மற்ற பாகங்களுக்கு பரவுவதை தடுக்கும்.

இஞ்சி

இஞ்சி பழங்காலம் முதலே பல இயற்கை வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. பல மோசமான நோய்களுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக செயல்படக்கூடும்.

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஷோகள் போன்ற பொருட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. இஞ்சி நீண்ட காலமாக புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மீன்

எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்களை சாப்பிடுவது ஒமேகா 3 அமிலங்களை பெறுவதற்கான சிறந்த வழியாகும். ஒமேகா 3 அமிலம் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, இந்த ஒமேகா -3 அமிலம் அதிலுள்ள ஆண்டி-ஆன்ஜியோஜெனிக் பண்புகளால் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது.

இதன் மூலம் ஒமேகா 3 அமிலம் புற்றுநோய் செல்களுக்கு கிடைக்கும் இரத்தத்தை குறைக்கிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் அதிகளவு ஆன்டிஆக்சிடண்ட்கள் உள்ளது, இதிலுள்ள கேட்டச்சினின் மற்றும் எபிகேட்டச்சின்கள் இதனை புற்றுநோயை தடுக்கவும், அதற்கு எதிராக செயல்படவும் சிறந்த பொருளாக மாற்றியுள்ளது.

கேட்டச்சினின் புற்றுநோய் செல்கள் உங்கள் உடலில் பரவுவதை தடுக்கும், எனவே உங்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் இதனை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Related posts

உடலில் கொழுப்பின் உண்மையான வேலை என்னவென்று தெரியுமா?

nathan

சளி இருமலை போக்கும் தூதுவளை!

nathan

அளவுக்கு மீறினால் நஞ்சு! அதுவே.. அளவாக குடித்தால்?

nathan

மார்பகம், கருப்பை புற்றுநோய் குறித்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தல்

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல்

nathan

உங்கள் கவனத்துக்கு காதுக்குள்ள ஏதாவது பூச்சி போய்ட்டா உடனே என்ன பண்ணணும்?

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஆரோக்கியமான பற்களுக்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்

nathan

மகிழ்ச்சியின் ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்

nathan

எடை தூக்கினால் குடல் இறங்குமா?

nathan