26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ice qupe
அழகு குறிப்புகள்

ஐஸ் கட்டிகளைப் பற்றியும் அதனால் உண்டாகும் அதிசயிக்கத்தக்க பலன்களையும்…

ஐஸ் கட்டிகள் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சருமப் பராமரிப்புகளில், மிகவும் மலிவான அதேசமயம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது தான் இந்த ஐஸ் கட்டி.

மலிவானதாக இருந்தாலும் இதனுடைய பயன்கள் அளவிட முடியாதது. அதனால் எப்போதுமே ஒரு பொருளின் விலையை வைத்து அந்த பொருளினுடைய பயன்பாட்டை மதிப்பிடக் கூடாது.

இந்த ஐஸ் கட்டிகளைப் பற்றியும் அதனால் உண்டாகும் அதிசயிக்கத்தக்க பலன்களையும் பற்றி இங்கே பார்க்கலாம்.

ice qupe

சன்பர்ன்

வெயிலில் சுற்றித் திரிந்துவிட்டு வந்தபிறகு நம்முடைய முகத்தை நம்மாலேயே பார்க்க சகிக்காது. முகம், கை, கால் என சருமம் முழுக்க எரிச்சல் உண்டாகும். சில சமயம் வலிக்கக்கூட செய்யும். அதுபோன்ற சமயங்களில் இந்த ஐஸ் கட்டிகள் தான் உங்களைக் காப்பாற்றும்.

குறிப்பாக அபப்டியே வெறும் ஐஸ் கட்டிகளைப் பயய்படுத்துவதை விடவும் கூட, ஆலிவேரா ஜெல்லை ஐஸ் டிரேயில் போட்டு ஐஸாக்கி அதன்பின் அதை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆலிவேரா ஜெல்லிற்குப் பதிலாக வெள்ளரிக்காயையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கண் வீக்கம் உடனே

குறைய சரியான தூக்கமின்மை, கணினி முன்னால் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் கண்கள் லேசாக வீக்கம் ஏற்படுவது போன்ற விஷயங்கள் உண்டு.

ஐஸ் கட்டிகளை சாதாரணமாக தண்ணீர் மட்டும் ஊற்றி ஐஸ் டிரேயில் வைக்கலாம். அதைவிட தண்ணீருடன் பால், க்ரீன் டீ போன்றவற்றைச் சேர்த்து ஐஸ் டிரேயில் வைக்கலாம்.

எப்படி அப்ளை செய்ய

பொதுவாக ஐஸ் கட்டிகளை முகத்தில் தடவுவதற்கு முன்பாக முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அப்ளை செய்து மசாஜ் செய்து சில நிமிடங்கள் உலர விட்டுப் பின் முகத்தை டவலால் துடைத்துக் கொள்ளுங்கள்.

பருக்கள் குறைய முகப்பருக்களைத் தீர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஐஸ் கட்டிகள்தான். பருகு்கள் வந்துவிட்டதல் க்ரீம், ஜெல் என எதுவும் தேடத் தேவையில்லை.

ஐஸ் கட்டிகளை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்து நன்கு மென்மையாக மசாஜ் செய்து வந்தாலே போதும் பருக்கள் வேகமாக மறைய ஆரம்பிக்கும்.

குறிப்பாக, முகப் பருக்களால் ஏற்படுகின்ற வீக்கம், சிவந்து போதல், கட்டிகள் உண்டாதல் போன்றவற்றையும் சரிசெய்வதில் ஐஸ் கட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

பருக்கள் குறைய

முகப்பருக்களைத் தீர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஐஸ் கட்டிகள்தான். பருகு்கள் வந்துவிட்டதல் க்ரீம், ஜெல் என எதுவும் தேடத் தேவையில்லை.

ஐஸ் கட்டிகளை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்து நன்கு மென்மையாக மசாஜ் செய்து வந்தாலே போதும் பருக்கள் வேகமாக மறைய ஆரம்பிக்கும்.

குறிப்பாக, முகப் பருக்களால் ஏற்படுகின்ற வீக்கம், சிவந்து போதல், கட்டிகள் உண்டாதல் போன்றவற்றையும் சரிசெய்வதில் ஐஸ் கட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.

பயன்படுத்தும் முறை

பருக்கள் உள்ள சருமத்தில் ஐஸ் கட்டிகளை பயன்படுத்தும் போது, முதலில் முகத்தை நன்கு கழுவி விட்டு ஈரமில்லாமல் முகத்தைத் துடைத்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு பிளாஸ்டிக் கவரால் ஐஸ் கட்டியை நன்கு சுற்றிக் கொள்ளுங்கள். அதை முகப்பருக்கள் உள்ள இடத்தில் வைத்து ஒற்றி எடுங்கள்.

அதன்பின் அப்படியே ஐந்து நிமிடங்கள் வரை உலர விடுங்கள். நீங்கள் ஏதேனும் எசன்ஷியல் ஆயில் பயன்படுத்துபவராக இருந்தால் அந்த ஆயிலை ஒரு சில துளிகள் ஐஸ் கட்டியில் விட்டு பின், ஐஸ் கட்டியை துணியிலோ பிளாஸ்டிக் கவரிலோ சுற்றி பருக்களின் மேல் வைத்து மசாஜ் செய்யுங்கள்.

வயதாவதை தடுக்க

நமக்கு வயதாவது நமக்கே வெளிப்படுத்துவதற்கான முகம் மற்றும் நெற்றிப் பகுதிகளில் விழும் கோடுகள் தான் நமக்கு வெளிப்படுத்துகி்னறன.

அதிலும் சிலருக்கு சருமத்தை முறையாகப் பராமரிக்கமால் விட்டுவிடுவதால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் வந்து விடுகிறது.

ஆனால் நாம் முறையாக சருமத்தைப் பராமரித்தால் வயதான தோற்றம் உண்டாவதை தவிர்க்க முடியும்.

எப்படி பயன்படுத்துவது?

குளிர்ந்த நீரால் நன்கு முகத்தைக் கழுவ வேண்டும். அதன்பின் ஈரமில்லாத டவலால் முகத்தை நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். அதன்பின், ஐஸ் கட்டிகளை எடுத்து முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்துவிடுங்கள்.

தொடர்ந்து ஐஸ் கட்டிகளை இவ்வாறு சருமத்தில் மசாஜ் செய்து வந்தால் மிக விரைவிலேயே நல்ல மாற்றத்தை உங்களால் பார்க்க முடியும்.

எண்ணெய் சருமத்தை சரிசெய்ய

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு நிறைய சருமப் பிரச்சினைக்ள வரும். பருக்கள் ஏற்படும். அப்படி நிறைய பிரச்சினைகள் இருக்கும். ஆனால் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக ஐஸ் கட்டி ஒத்தடம் இருக்கும்.

ஐஸ் சருமத்தில் அதிக அளவிலான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

எப்படி பயன்படுத்தலாம்?

முகத்தை நன்கு கழுவி சுத்தமாகத் துடைத்துவிடுங்கள். அதன்பின் ஐஸ் கட்டியை ஒரு துணியில் வைத்து நன்றாக சுற்றி முகத்தில் ரப் செய்யுங்கள். நன்றாக ஐஸ் கட்டியை சருமத்தில் ரப் செய்த பின்பு சிறிது நேரம் உலர விட்டு பின், முகத்தில் மாய்ச்சரைஸரை அப்ளை செய்யுங்கள்.

இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால் புதினா இலைகளையோ அல்லது சாறையோ ஐஸ் டிரேயில் வைத்து ஐஸ் தயாரித்துப் பயன்படுத்துங்கள்.

Related posts

கொழு கொழு கன்னங்கள் பெற

nathan

கன்னம் இருந்தால் இளமையாகவும், அதிக கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்!….

sangika

அழகு குறிப்பு – வசீகரிக்கும் முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல்ஸ்!. !

nathan

விரைவில் முதுமை தோற்றத்தை தரும் உணவுகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால் என்னவாகும்?

nathan

வீட்டிலேயே கவனமாக ஒரு ஃபேசியல் எவ்வாறு செய்து கொள்வது

nathan

இந்த ஐந்து ராசிகளை சேர்ந்த பெண்கள் வலிமையான மற்றும் அன்பான சகோதரிகளாக இருப்பார்கள்…

nathan

சூப்பரான முந்திரி காளான் மசாலா:

nathan

இதை நீங்களே பாருங்க.! இந்திய கிரிக்கெட் அணி வீரரின் மனைவி வெளியிட்ட புகைப்படம்!

nathan