25.7 C
Chennai
Friday, Jan 24, 2025
women Watch wear hand
அலங்காரம்ஃபேஷன்

கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்…..

நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன.

நவநாகரீக பெண்கள் அணிகின்ற வகையில் அழகிய வடிவமைப்புடன் கடிகாரங்கள் முந்தைய பட்டை அமைப்பிலான ஸ்ட்ராப் டைப் வாட்ச்கள் என்பது மாறுபட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இந்த அதிநுட்பமான வேலைப்பாடு மிகுந்த கைக் கடிகாரங்கள் என்பது கணினி உதவியுடன் கண்கவர் வடிவங்கள் உள்ளவாறு உருவாக்கப்படுகின்றன. இதன் சிறப்பம்சம் எனும்போது சிக்கலான சிற்பங்கள் என்பதை வடிவமைப்பாக கொண்டு அழகிய வண்ண கற்கள் பொருத்தப்பட்டவாறு கிடைக்கின்றன. அதாவது பூ வேலைப்பாடு கொண்ட ஸ்ட்ராப் முதல் மேம்பட்ட புதிய டிசைன்கள் பல உள்ளவாறு கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன.

women Watch wear hand

பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள்மேம்பட்ட சிக்கலான வேலைப்பாட்டுடன் அழகிய பழங்குடியினர் வளையம் போன்ற கைக் கடிகாரங்கள் கிடைக்கின்றன. பப்- பிரிண்டட் செய்யப்பட்ட மாசாபா மோதிப்ஸ் டையல் பகுதிகளிலும், சூரிய கதிர் போன்ற பினிஷ் செய்யப்பட்ட ஜலி பேட்டர்ன் அமைப்பு உள்ளது. இதன் சிற்பங்கள் இணைந்த வளையல் அமைப்பு இரு சுழற்சி கொண்டவாறு கடிகாரப்பகுதி ஒரு பக்க இணைப்பில் பற்றியவாறு உள்ளது. அந்த சிற்ப அமைப்பு அழகிய உருளைகள் மற்றும் சிற்பங்கள் இணைந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தின் உலோக வண்ண சாயல் என்பது செம்மை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வளைய பகுதியும் சிறிய செதுக்கல்கள், உருவ பின்னணி கொண்டவாறு மிக துல்லியமான நுண்ணிய வேலைப்பாடுடன் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது, நீண்ட நாள் உழைக்கக்கூடிய வகையிலான மேற்பூச்சுடன் உள்ளது.

பூ வேலைப்பாட்டுடன் கூடிய கைக்கடிகாரங்கள்

முதன்மையான டையல் பகுதி என்பது வட்ட வடிவிலும், ஓவல் மற்றும் மொட்டு அமைப்பிலும் இருக்கும் படியான கடிகார அமைப்பின் ஸ்ட்ராப் என்பது மட்டும் பூ வேலைப்பாட்டுடன் அழகிய வடிவங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூ வேலைப்பாடு பூ பேட்டர்ன் மற்றும் பெசல் அமைப்புடன் கூடிய ஸ்ராப் உள்ளது. இந்த தங்க பூ வடிவ அமைப்பின் நடுவே ஜொலிக்கும் ஸ்வரோஸ்கி கற்கள் பதியப்பட்டுள்ளன.

வண்ண கற்கள் பதியப்பட்ட கொடி பின்னல் கைக்கடிகாரம்
வெள்ளை நிற பின்னணியில் தங்க நிற வடிவமைப்பு முதன்மை கடிகாரம் இருக்க வலை பின்னல் அமைப்பிலான ஸ்ட்ராப் வண்ணக்கற்கள் பதியப்பட்டவாறு உள்ளன. அதாவது பட்டையான தங்க தகட்டில் இடைவெளிவிட்டு காற்றோட்டமான அமைப்பில் உருவங்கள் மட்டும் தெரியும் வகையில் உள்ளன. இந்த இடைவெளி விட்ட உருவ அமைப்பில் சிறு சிறு வண்ணங்கள் பூ, இலை, கொடி அமைப்பு என்றவாறு தனி வண்ணங்களில் பதியப்பட்டுள்ளன. முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் மேற்புறம் சிறு வைரக்கற்கள் பதியப்பட்டுள்ளன.
ஆடை மடிப்பு போன்று கைக்கடிகாரங்கள்

அழகிய உருளை கம்பி இருபக்கவாட்டு அமைப்புடன் நடுப்பகுதியில் ஆடை மடிப்பு போன்று கம்பிகள் குறுக்குவாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இடைவெளிவிட்டு கம்பி அமைப்பு மேல் எழுந்தவாறு அலை அமைப்புடன் காணப்படுகிறது. அதுபோல் ஒரு கம்பி விட்டு ஒரு கம்பி அமைப்பில் அழகிய இளஞ்சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு சாயல் கொண்ட வண்ண பின்னணிக்கு ஏற்ப டயல் பகுதியும் அதே வண்ணத்தில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

கலைநயத்துடன் உருவான பதக்க அமைப்பு கைக்கடிகாரங்கள்

முதன்மை கடிகாரப்பகுதி என்பது வட்டவடிவில் முல்லை நிற இலை சாயலுடன் உள்ளது. அதுபோல் இதன் ஸ்ட்ராப் பகுதி மீதான வட்ட வடிவ பதக்கங்கள் இணைக்கப்பட்ட அமைப்பில் உள்ளன. வட்ட வடிவ பதக்கம் என்பது இலைப் பிரிவுகளுடன் கூடிய பூவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பூப்பகுதி மட்டும் சிறு கற்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன.

வெள்ளி நிற பின்னணி கைக்கடிகாரங்கள்

ஓவல் வடிவ முதன்மை கைக் கடிகாரப்பகுதி என்பது வெளிர் நீல டையல் பின்னணியுடன் காட்சி தருகிறது. அதன் ஸ்ட்ராப் பகுதி சிறு சிறு டப்போதில் மலர் போன்று வெள்ளி கம்பியில் உருவாக்கப்பட்டு அதன் நடுவே ஒற்றை வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. வெள்ளி நிற சாயலுடன் வெள்ளை கற்கள் பதியப்பட்ட இந்த கடிகாரம் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

பிரேஸ்லெட் அமைப்பிலான கைக்கடிகாரங்கள்

உருளை கம்பியின் ஒரு பகுதி கடிகாரமும், ஒரு பகுதியில் கற்கள் உள்ளவாறு பிரிவுகளுடன் கூடிய பிரேஸ்லெட் கடிகாரம் என்பது அழகுடன் அனைவரது கவனத்தையும் ஈர்க்கின்றது. கம்பி அமைப்பில் மெல்லிய அமைப்பில் டிசைன்கள் செய்யப்பட்டும் அதிலிருந்து மேலே எழுந்தப்படி பூ மொட்டு போல வண்ண கற்கள் பதியப்பட்டுள்ளது. வெள்ளி, தங்க, ரோஸ் கோல்டு வண்ண பின்னணியில் அழகிய பிரேஸ்லெட்-கள் வருகின்றன. பிரேஸ்லெட் போலவும், அதே நேரம் கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்.

Related posts

பொட்டு!!

nathan

புதிய ஆடைகளை வாங்கி அப்படியே அணிபவரா? அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்..!

nathan

பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு..?

nathan

உள்ளம் கொள்ளை போகும் – வைர நகைகள்

nathan

பெண்கள் விரும்பி அணியும் வளையல்கள்

nathan

உன்னையே நீ அறிவாய்!

nathan

கருப்பு அங்கிக்குள் கரையும் கனவுகள்

nathan

பெண்களை கவரும் கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்

nathan

பெண்களின் அழகை மேலும் ஜோலிக்க வைக்கும் ஆபரணங்கள்…..

sangika