29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
கர்ப்பிணி பெண்களுக்குபெண்கள் மருத்துவம்

குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல் வேறு வழிகள்….

திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ இன்றைய நவீன யுகத்தில் திருமணத்தையே தள்ளிப்போட்டு வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்தபிறகே திருமணம் செய்துகொள்கின்றனர் அதோடு விட்டார்களா இவர்கள், திருமணம் முடித்த‍ இந்த‌ ஆணும் பெண்ணும் உடனடியாக குழந்தையை பெற்றுக் கொள்ள‍ விரும்புவதில்லை. கேட்டால் ஏதோ ஏதோ காரணங்கள் சொல் வார்கள். அவ்வாறு திருமணம் ஆன புதிதில் குழந்தை பிறப்பை தள்ளிப்போட பல் வேறு வழிகள் இருந்தாலும் எந்த முறையை பயன்படுத்தினால் பிரச்சனை வராது என்பதை பற்றி பார்க்கலாம்.

திருமணம் ஆன புதிதில் குழந்தை பிறப்பை தள்ளிப்போட என்ன செய்யலாம்

திருமணமான புதிதில் பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளையும் ஆண்கள் ஆணுறையையும் பயன்படுத்தலாம். கர்ப்பத்தடை மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உபயோகிக்கலாம். இதைச் சரியாக உபயோகித்தால் கருவுறாமல் இருக்கலாம். ஆனால், இந்த மாத்திரைகளை ஒன்றிரண்டு வருடத்துக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

6 large 1

இந்த மாத்திரைகள் சிலருக்கு சில அசௌகரியங்களை உண்டுபண்ணலாம். அப்படி யிருந்தால் ஆண் ஆணுறையையும், பெண், விந்து நாசினி கிரீமையும் சேர்த்து உபயோகிக்கலாம்.

இப்போது இந்தியாவில் பெண்களுக்கான “பெண்ணுறை“ விற்பனைக்கு வந்துள்ள ன. இவற்றையும் பெண்கள் உபயோகிக்கலாம். திருமணமாகி, குழந்தைகளும் பிற ந்து விட்டிருந்தால் அப்போது பயன்படுத்த வேறுபல கருத்தடை முறைகள் உள்ளன. இரண்டு குழந்தைகளுக்கு நடுவே இடைவெளிவிட நினைப்பவர்கள் காப்பர்-டி மாதிரியான சாதனத்தை மருத்துவரின் ஆலோசனைப்படி பொருத்திக்கொள்ளலாம்.

குழந்தை பெற்றது போதும், இனி “நோ பேபீஸ் ( #No_Babies )“ என்பவர்கள் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

இப்போதெல்லாம் லாப்ரோஸ்கோபி முறைப்படி மிகத்துரிதமாக இக்கர்ப்பத்தடை அறுவை சிகிச்சைகைளை செய்துகொள்ள முடிகிறது. அதிலும் ஆண்களுக்கான வாசக்டமி எனும் அறுவை சிகிச்சை ரொம்பச் சுலபம் என்பதால் இதைப் பயன்படுத் திக்கொள்ளலாம்.

Related posts

கருவுருதலுக்கு இடையூறு அளிக்கும் காரணி…..

sangika

கர்ப்பிணிகள் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

சுகபிரசவத்துக்கு என்ன வழி?

nathan

கர்ப்ப காலத்தில் முட்டை, ஈரலை தவிர்ப்பது நல்லது

nathan

கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் அளிக்கும் நன்மைகள்!!!

nathan

வலிப்பு நோய் வரும் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை

nathan

தாய்பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

nathan

கர்ப்ப கால சர்க்கரை நோயால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

nathan