nature22
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

முகம் பொலிவுடன் மிளிர……..

தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.
* கேரட்டை அரைத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்தவுடன், முகத்தை கழுவவும். முகம் பளிச் என்று இருக்கும்.

* பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

nature22

* உலர்ந்த சருமத்திற்கு முட்டையின் கருவை தனியே பிரித்து எடுத்து அத்துடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ, முகம் பொலிவுடன் மிளிரும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.

* செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

* முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.

* உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

Related posts

மகத்துவமான மருதாணி:

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தை பொலிவாக்கும் மைசூர் பருப்பு….

nathan

தமிழ் பெண் கண்ணம்மாவா இது?புடவையில் வைலரகும் புகைப்படம்

nathan

உங்களுக்கு தெரியுமா வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பேக்கில் வைத்திருக்க வேண்டிய 7 அத்தியாவசிய மேக்கப் பொருட்கள்

nathan

பீச் பழம் எவ்வாறு சருமத்தைப் பாதுகாக்கும்?…

sangika

சில நிமிடங்களில் வசிகரிக்கும் அழகை பெற அழகுக் குறிப்புகள்…….

nathan

சூப்பர் டிப்ஸ்.. சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் சிட்ரஸ் பழங்கள்!

nathan

உங்க சருமத்தை பிரகாசமாக்கும் முல்தானி மெட்டியை பயன்படுத்துவது எப்படி?இத படிங்க!

nathan

பருக்கள் வராமல் தடுக்க

nathan